Sunday, April 16, 2023

தாய்மை ஒரு அற்புதம்தான்..

தாய்மை ஒரு அற்புதம்தான்..

😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔


இடதுபுறம் ஏழு மணி நேரம் நீடித்த 

பிரசவ அறுவை சிகிச்சைக்குப்பின் 

தாயின் கைகளில் புதிதாகப் பிறந்த 

குழந்தை || வலதுபுறம் மருத்துவர் அழுகிறார்.


தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் குழந்தை சாதாரணமாக பிறக்கவில்லை. தாயின் 11 வருட பொறுமை பிரார்த்தனை, 7 மணிநேர அறுவை சிகிச்சையின் முடிவில் 'குழந்தை அல்லது தாய் என்ற ஒற்றைத் தெரிவு' தெளிவாக இருந்தது.


மருத்துவர்கள் போராடி எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் குழந்தையையும் தாயையும் ஒன்றாகக் காப்பாற்ற முடியவில்லை.


கடைசியில் தாயானவள்,"தன் உயிரை பணயம் வைத்து அவளின் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டதை டாக்டர் முடிவு செய்தார். குழந்தை பிறக்கின்றது. குழந்தையை தாயிடம் கொடுத்தனர் கடைசியாக இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் பெற்ற குழந்தையை நெஞ்சோடு அணைத்து, முத்தமிட்டு புன்னகைக்க.... அவளின் கண்கள் நிரந்தரமாக மூடுறது.


பிறக்கும் எல்லாக் குழந்தையும்போல அதுவும் ஏதும் அறியாமல் அழுகிறது...

இருவருக்கும் இடையில் எவ்வளவு குறுகிய நிமிடச் சந்திப்பு. தாய் இல்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய நீண்ட வேதனை..!


தாய்மை ஒரு அற்புதம்தான்..

(மருத்துவரின் வாட்ஸ்அப் பகிர்வு)

No comments:

Post a Comment