Wednesday, April 26, 2023

வாழ்க்கையில் வெற்றிகள் அதிகரிக்க!! || How to Increase success in life!!

வாழ்க்கையில் வெற்றிகள் அதிகரிக்க!! || How to Increase success in life!!







வாழ்க்கையில் வெற்றிக்கான முதல் முக்கியமான விஷயம் என்னயேன்றால் மிகப்பெரிய அளவில் சிந்தித்து உங்கள் குறிக்கோள்களை பெரிய அளவில் வைத்துக் கொள்வது தான்.

நீங்கள் இப்போது உள்ள நிலைமையில் இருந்து உங்களை 10 மடங்கு அல்லது 15 மடங்கு பொருளாதார அளவில் உயர்த்திக் கொண்டு உங்கள் மனதில் அந்த விஷயங்களை சிந்திக்க அனுமதியுங்கள்.

உதாரணமாக பெரும்பணம், செல்வச்செழிப்பு, ஆடம்பரமான கார், வசதியான வீடு, குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள அருமையான மனைவி, எப்போதும் நல்லுறவை தரக்கூடிய நண்பர்கள், ஆரோக்கியமான உடல், மற்றவர்கள் நம்மை உயர்ந்த மரியாதையுடனும் மதிப்புடனும் பார்த்தல், என்று இவை அனைத்தும் உங்களது வாழ்வில் நடக்க வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சின்ன விஷயங்களை யோசித்தாலும் நடக்கும், பெரிய விஷயங்கள் யோசித்தாலும் அது நடக்கும்.
சின்ன விஷயங்களை குறிக்கோளாக நிர்ணயித்து நடந்திட எவ்வளவு காலம் ஆகுமோ அதே நேரம் தான் பெரிய கனவை அடைவதற்கும் ஆகும்.

மனசு என்பது ஒரு விழை நிலத்தை போலவே ஏனென்றால் விலை உயர்ந்த முந்திரி, ஏலக்காய், மிளகு, இலவங்கம் சாகுபடி செய்ய எவ்வளவு உடலுழைப் பும், காலமும் தேவையோ அதே போல தான்  அரிசி, பருப்பு, காய்கறிகளை விளைவிக்கவும், அறுவடை செய்யவும் நேரம் செலவாகும்.

அதனால் நீங்கள் ஒரு பிரம்மாண்டமான நோக்கத்தை உறுதி செய்து, அதற்காக உழைக்க ஆரம்பியுங்கள்.

இவை அனைத்தும் நீங்கள் எப்படி கனவு காண்கிறீர்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதாவது ஒரு பைசா கூட இல்லை, அனைத்து விஷயங்களிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் சரி உங்கள் குறிக்கோளை நிர்ணயிப்பது முக்கியம்.

"ஏனெனில் உங்கள் கனவுகளை நிர்ணயித்தால் நீங்கள் உங்கள் வெற்றியை பாதி அடைந்ததற்கு சமம்".

நிறைய மக்கள் மிக வறுமையான நிலையில் இருந்து பெரும் பணக்காரர்களாக மாறி இருப்பதை நீங்கள்  கேட்டு இருக்கலாம்.
 இது எவ்வாறு நடந்தது, இதை எப்படி தெரிந்து கொள்வது!! 🤔🤔
 அதாவது அதை நீங்கள் தெரிந்துக் கொள்ள சிறிது நேரம் அமைதியாகவும், கவனமா கவும் இருந்து உங்களுடைய எல்லா நேரங்களிளும் நீங்கள் அடைய வேண்டும் என்று யோசித்த விஷயங்கள் என்னென்ன என்பதை எழுதிக் கொள்ளுங்கள், செயல்படுங்கள்.


1.நான் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்?
2. எந்த அளவு உங்களுடைய தொழிலை முன்னேற்ற வேண்டும்?
3. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?

இப்போது நீங்கள் எப்படிப்பட்ட பிரம்மாண்டமான கனவை அடைய வேண்டும் என்ற தெளிவான, துல்லியமான வரைபடம் உள்ளதோ அப்போது நீங்கள் நேர்மறை மனநிலை கொண்டவராக வலம் வர ஆரம்பிப்பீர்கள்.  உங்களுடைய கூர்மையான பார்வை, தெளிவான குறிக்கோள் மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
வெற்றி நிச்சயம்!!👍👍

Paragahakotuwa 
MSM Imthihas

No comments:

Post a Comment