மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் தக்வா கல்வி மேம்பாட்டுச் சங்கத்தினால் நடாத்தும் இரவு நேர சுயகற்றல் மையத்தினை மேற்பார்வை செய்தார்!..
தக்வா கல்வி மேம்பாட்டு சங்கம் (TEDS)
2023/05/01. காலை 8.30
இன்று அம்பேஹேன்வேவ கிராமத்தில் தக்வா கல்வி மேம்பாட்டு சங்கத்தினால் நடாத்தும் இரவு நேர சுய கற்றல் மையத்தினை (Night study) மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் மதிப்புக்குரிய திரு. ஹைதர் அலி அவர்கள் மேற்பார்வை செய்துள்ளார்.
இதன் போது ஊர் மக்கள் அனைவரும் அதிபர் அவர்களை வருக வருக என வரவேற்று இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இங்கு மாணவர்களின் இரவு நேர செயற்பாடுகள், பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு வழிகாட்டுதல், கல்வி சம்பந்தமாக பெற்றார்களுக்கு தெளிவூட்டல் போன்ற முக்கியமான அம்சங்களைக் கொண்ட சிறப்பு நிகழ்வாக இது இடம் பெற்றுள்ளது.
இன் நிகழ்வில் மஸ்ஜித் தக்வா நிர்வாக தலைவர் , நிருவாக குழு, Taqwa educational development society உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் , என பலர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வு தேனீர் உபசாரிப்புடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
நன்றி
MSM Imthihas
Paragahakotuwa
1-05-2023
No comments:
Post a Comment