Thursday, May 4, 2023

மதீனாவில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்


ரமலான் பண்டிகை கொண்டாட்டம்












தேசிய மட்டத்திலான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் இன்றைய தினம் 2023/05/04 மதீனா தேசிய பாடசாலையில் (Giriulla Zonal Office)  கல்லூரியின் அதிபர் S.M. ஹைதர் அலி (SLEAS) அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.




















கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.




மேலும் இந்நிகழ்வின்

 பிரதம அதிதியாக

அழகியல் கல்வி, மார்க்க மற்றும் விழுமிய கல்விக்கான கல்விப் பணிப்பாளர் கலாநிதி நிஷாத் ஹந்துன்பதிரன அவர்களும்,

 

கௌரவ அதிதியாக

 முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி கிளையின் கல்விப் பணிப்பாளர் மேஜர். N.T. நஸிமுதீன் அவர்களும்,

 

விஷேட அதிதிகளாக

 கல்வி அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் M.R.M. இர்ஷான், கல்வி அமைச்சின் உதவி கல்விப் பணிப்பாளர் M.I.M. நவ்பர்தீன் மற்றும் கிரியுள்ள கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் S.L.M. பாயிஸ் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

























மேலும்

அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேசத்தின் பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




 

 

No comments:

Post a Comment