Sunday, December 17, 2023

பறகஹகொட்டுவ கிராமத்துக்கு மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் SM ஹைதர் அலி( SLEAS ii ) அவர்கள் வருகை!..

  



 MEDS நிறுவனத்தினால் வருடா வருடம் நடைபெற்று வரும் ஆசிரியர் பாராட்டு விழா இன்று 2023/12/17 MEDS நிறுவனத்தின் தலைவர் SAM நபீல் அவர்களின் தலைமையில் மிக விமர்சயாக பறகஹகொடுவ MEDS வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு குருநாகல் - மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் மதிப்பிற்கும், மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் மிக்க SM ஹைதர் அலி (SLEAS ii ) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.





மேலும் இந்நிகழ்வில் மதீனா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் AGM பசரி (SLPS 1) அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது ஆசிரியர்களை பாராட்டியும், ஆசிரியர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், MEDS நிறுவனத்தின் வளர்ச்சியையும் பற்றி தெளிவாக கூறி " இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டுவதே கல்வி. கல்வி கற்பது தவம், அதை கற்பிப்பது வரம். யார் கைவிட்டாலும், கற்றது கைவிடாது உன்னை" என்று எல்லோர் மனதையும் தொட்டு விட்டு சென்றார்.






 மேலும் தொடர்ந்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மதிப்புக்குரிய ILM சாதிக் மந்திரி அவர்களினால் வரவேற்பு உரை இடம் பெற்றது இதன் போது 2010 ஆம் ஆண்டு வருடாந்த மஸ்ஜித் பொதுக்கூட்டத்தில் அப்போதைய மதீனா தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் தற்பொழுது கெகுனகொள்ள தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான MLA சத்தார் அவர்களின் கவலையான செய்தி அதாவது ( சிம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் எமது ஊர் மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் மோசமாக உள்ளது). இதற்குத் தீர்வாக 2011 பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி மர்ஹூம் அல்ஹாஜ் AGM நளீப் அவர்களின் தலைமையில் ஏறத்தாள 25 வாலிபர்கள் ஒன்று திரண்டு அவர்களின் சொந்த பணங்களை முதலீடு செய்து இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. என்ற வரலாற்றை நினைவு படுத்தி விட்டு,



மேலும் இதன் இயக்கத்திற்கு எனது ஊர் கட்டார் வாழ் சகோதரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை கூறினார், " கல்வி ஒன்றே தாழ்ந்து கிடக்கும் மக்களை மேலே உயர்த்தும் ஆயுதம்" என்று கூறி நிறைவு செய்தார்.




 தொடர்ந்து மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதன் போது மாணவர்களின் ஒழுக்கம், மாணவர்களின் நேர முகாமைத்துவம், மாணவர்கள் எவ்வாறு இலக்கை தீர்மானிக்க வேண்டும், மாணவர்கள் பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார், ஆண் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் பற்றி பெற்றோருக்கு தெளிவுபடுத்தினார். மேலும் பாடங்களை எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும், முக்கியமாக பெண் மாணவிகளை காலை 6:30 ற்கு பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், விசேட வகுப்புக்கள் இருந்தால் மாத்திரம் உரிய ஆசிரியர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அனுப்புமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும்




 "உனது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்று கூறி அவர் உரையை முடித்துவிட்டார். எமது பள்ளி தலைவர் RM கியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க மஸ்ஜித் வாசிகசாலையை அதிபர் அவர்கள் மேற்பார்வை செய்தார்கள்,



 தொடர்ந்து MEDS நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் MSM அஷ்ரப்தீன் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டன.





 இறுதி நிகழ்வாக

* MEDS நிறுவனத்தில் கல்வி கற்று புலமை பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசீல்கள் பிரதேச சபை உறுப்பினர் MSM ஷாஜகான் மந்திரி, SAM இர்பான் ஆகியோரின் தலைமையில் வழங்கி கௌரவிக்கப்பட்டன.





* MEDS நிறுவனத்தில் கல்வி கற்று O/L சித்தி பெற்ற மாணவர்களுக்கான ,MEDS நிறுவனத்தின் ஆணிவேராக திகழும் ஆசிரியர்களுக்கான பரிசீல்களும்




 MEDS நிறுவனத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டு துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்தது.



MSM IMTHIHAS






No comments:

Post a Comment