Wednesday, March 27, 2024

பத்ர் யுத்தம் - தமிழ்

 பத்ர் யுத்தம் - தமிழ்



புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

🛑 1440 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு தினமான ரமழான் மாதம் பிறை 17 ல்தான் இந்த மண்ணில் தருமம் வாழ்வதா அதர்மம் வாழ்வதா என்று  முடிவுக்கு வந்தது. அல்லாஹ்வின் நாமம் உலகெங்கும் ஒலிக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 


நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.


பத்ர் போரின் பின்னணி'அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123) முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)





🛑 முஸ்லிம்களின் படை நபிகளாரின் தலைமையிலும், குரைஷி காபிர்களின் படை அம்ர் பின் ஹிஷாம் தலைமையிலும் பத்ர் என்ற இடத்தில் மோதிக் கொண்டன. பத்தர் என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் அமைந்துள்ள பிரபலமான ஒரு நீர் தடாகம் அமைந்துள்ள இடமாகும்.



🛑 இராணுவ பலம் 

⚖ முஸ்லீம் படைகள்: 

🤺 313 - 340 க்கும் இடைப்பட்ட வீரர்கள்.

🏇 இரண்டு குதிரை வீரர்கள்.


 ⚖ குரைஷி காஃபிர் டடைகள்:

🤺 1,000 வீரர்கள்.

🏇 100 - 200 க்கும் இடைப்பட்ட குதிரை வீரர்கள்.




🛑 யுத்த இழப்புகள்:

முஸ்லிம் படைகளில் 14 வீரமரணங்கள்.

6 பேர் புலம்பெயர்ந்தோர் (முஹாஜிர்கள்)

8 பேர் மதீனா வாசிகள்(அன்ஸாரிகள்)


குரைஷி காஃபிர் படைகள்: 

70 சாவுகள்.

70 யுத்த கைதிகள்.



இம்திஹாஸ்

பரகஹகொடுவை 

No comments:

Post a Comment