Friday, April 28, 2023

சிறுவர்களுக்கான மரபுத்தொடர்கள்

 சிறுவர்களுக்கான மரபுத்தொடர்கள் 


கால் பற்றிய மரபுத்தொடர்

  • கால் கிளர்தல் - ஓடுதல்
  • கால் சாய்தல் - அடியோடு அழிதல்
  • கால் தாழ்தல் - தாமதித்தல்
  • கால்பிடித்தல் - கெஞ்சுதல்
  • காலாடுதல் - முற்சியால் செல்வஞ் செழித்தல்


கழுத்து பற்றிய மரபுத்தொடர்

  • கழுத்தறுத்தல் - தீமை செய்தல்
  • கழுத்து முறிதல் - வருந்துதல்
  • கழுத்திற் கட்டுதல் - வலிந்து பொறுப்பாளியாக்குதல்
  • கழுத்துக் கொடுத்தல் - பிறர் காரியத்தை ஏற்றல்
  • தைக்கட்டுதல் - விடாது. விடாது நெருக்குதல்



கண் பற்றிய மரபுத் தொடர்

  • கண்ணிற்றல் - எதிர் நிற்றல்
  • கண் திறத்தல் - அறிவுண்டாதல்
  • கண்ணெறிதல் - கடைக்கண்ணாற் பார்த்தல்
  • கண்ணோடுதல் - இரங்குதல்
  • கண் மலர்தல் - விழித்தல் 
  • கண்கலத்தல் - எதிர்படுதல்
  • கண்காட்டிவிடல் - கண்சாடையால் ஏவிவிடல்
  • கண் சாத்துதல் - அன்போடுபார்த்தல்
  • கண் சாய்தல் - அறிவு தளர்தல்


அடி பற்றிய மரபுத்தொடர்

  • அடி கோலுதல் - அத்திவாரமிடல்
  • அடிப்படுத்துதல் - கீழ்ப்படுத்துதல்
  • அடிப்பார்த்தல் - நிழலளர்ந்து பொழுதறிதல்
  • அடியொற்றுதல் - பின்பற்றல்
  • அடி சாய்தல் - நிழல் சாய்தல்
  • அடியுறை - பாத காணிக்கை
  • அடி நகர்தல் - இடம் விட்டுப் பெயர்தல்
  • அடிப்படுதல் - பழமையாக வருதல்
  • அடி திரும்புதல்  - பொழுது சாய்தல்
  • அடியொற்றுதல் - பின்பற்றுதல் 


முகம் பற்றிய மரபுத்தொடர்

  • முகங்காட்டுதல் - காட்சி கொடுத்தல்
  • முகமாதல் - உடன்படுதல்
  • முகமறிதல் - மனம்நோதல்
  • முகங்கோணல் - வெறுப்புக்குறி
  • முகத்தில் கரி பூசல் - அவமதித்தல் 




No comments:

Post a Comment