உணர்வுகளை மதிக்கத் தெரியாத இடத்தில் கோபுரமாய் இருப்பதை விட.... உணர்வுகளை மதிக்கத் தெரிந்த இடத்தில் குப்பையாய் இருப்பதே மேல்....
வாழ்க்கையில் எதுவுமே நமக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்து கொண்டால் சந்தோஷங்கள் மட்டுமல்ல துக்கங்களும் கொண்டாட்டத்திற்குரியதே...
வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்.
1) பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது
2) மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.
உங்கள் கவலை, துன்பம், ரகசியம் அனைத்தையும் கடவுளிடம் மட்டும் பகிருங்கள். உறவுகளிடம் பகிர்ந்தால், உங்கள் கவலை, துன்பம், ஏமாற்றம் இரட்டிப்பு ஆகக்கூடும்
பாம்பு எத்தனை முறை தோலை உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான். பச்சோந்தி எத்தனை முறை நிறம் மாறினாலும் அது எப்போதுமே பச்சோந்தி தான் துரோகம் துரோகம் தான் ஏமாற்றம் ஏமாற்றம் தான்
போராடி கிடைத்தது கருவறை..! தேடலால் கிடைத்தது வகுப்பறை..! தேடிக் கிடைத்தது மணவறை..! தேடாமல் கிடைக்கும் கல்லறை..!
இருக்கும் போது கிடைக்காத நீதியும் இறந்த பின் கொடுக்கும் திதியும். இறந்த பின் கிடைக்கும் நிதியும். இறந்தவருக்கு யாதொரு பயனும் இல்லை.
கொடிய மிருகங்கள் நம்முள்ளேதான் இருக்கின்றது அதை கட்டுபடுத்த தெரிந்தவர் ஞானி அதை கட்டவிழ்த்து விடுபவன் மகா பாவி...!
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கியுள்ளது. நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது
நாம் செய்த தவறுக்கு கிடைக்காத தண்டனை. செய்யாத தவறுக்கு கிடைக்கும் போது தான். வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கிறது விதி வலியது...!
கஷ்டங்களை தாங்கும் இதயம் காயங்களை தாங்குவது இல்லை. வலிகளை தாங்கும் இதயம் கடுமையான வார்த்தைகளை தாங்குவது இல்லை ஏமாற்றத்தை தாங்கும் இதயம் துரோகத்தை தாங்குவது இல்லை
முட்டாள் பழி வாங்க துடிப்பான். புத்திசாலி மன்னித்து விடுவான். அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்தே விழகி விடுவான்.
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால். எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
ஒருவரின் தேவை அறிந்து அவர் கேட்காமலே நீ உதவி செய்வாய் என்றால் நீயும் கடவுள் தான்.
சூழ்நிலையால் மாறுகிறவர் கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்... சுயநலத்தால் மாறுகிறவர் கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்...!
கஷ்டப்பட்டு வாழனும் என்று வாழாமல். நாலு பேருக்கு நல்லது பண்ணி இஷ்டப்பட்டு வாழுங்கள். கவலையின் முடுச்சுகள் ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுப்பது இல்லை...!
MSM இம்திஹாஸ்
பரகஹகொடுவ,
No comments:
Post a Comment