நீர் மாசடைதல்
அறிமுகம்
விஞ்ஞான அபிவிருத்திக்கேற்ப மனிதனும் அபிவிருத்தி அடைகிறான். ஏனெனில் புதிய மாற்றங்கள் ஏற்படும் போது மனிதனும் அதற்கு ஏற்ப மாறுபடுகிறார். இன்று உலக மக்களுக்கு இயற்கையாக கிடைக்கப்பெறும் இயற்கைகளை அவனது அறிவாற்றலுக்கு ஏற்ற அதனை மாற்றி அமைக்கின்றான்.
இதன்படி ஒரு புறம் அனுகூலமாக
இருக்கும், மற்றொருபுறம் பிரதி கூலமாக இருக்கும். ஆனால் மனிதன் அனுகூலத்தை தான் விரும்புகிறான். என்றாலும் மனிதன் பிரதி கூலத்தைப்பற்றி ஒரு சிறு துணியேனும் சிந்தித்து
செயல்பட மாட்டான். இதுதான் மனிதனின் கொள்கையாக
இருக்கின்றது.
நீர் அனது அதன் பௌதீக, இரசாயண, உயிரியல் அம்சங்களில் மாற்றமடையும் போது நீர் மாசடைகி ன்றது. அதாவது ஏரிகள் ஆறுகள்,
கடல்கள், கிணற்று நீர் முதலிய நீர் நிலைகளில் காணப்படும் நீர் மனித நடவடிக்கைகளால் அதன் சிறப்பை
இழந்து குறிப்பிட்ட சூழல்தொகுதியின் பயன்பாட்டிற்கு பிரயோசனம்அழிக்காத முறையில் மாற்றமடைகின்ற தன்மையினை நாம் நீர் மாசடைதல் எனக் குறிப்பிடலாம்.
இன்று உலக மக்களுக்கு அருமையாக
கிடைக்கும் நீரை மனிதனால் முழுமையாக பயன்படுத்த தவறி விடுகிறான்.
இன்று விவசாய செய்கையில் போது விஞ்ஞான அபிவிருத்தியினால் குறைந்த காலத்தில்
கூடிய விளைச்சல் பெறக்கூடிய வகையில் பீடை நாசினி, பீடை கொல்லிகள், இயந்திர உதவிகள் மூலம் விவசாயம்
பறந்த அளவில் செய்கை பண்ணப்படுகிறது. என்றாலும் அது நல்ல காரியம் தான்
குறைந்த காலத்தில் கூடிய விளைச்சலைப் பெறலாம் என்று நாட்டு மக்களுக்கு அரசாங்கம்
பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்படுகின்றது.
இதன் காரணமாக நீர், நிலம் மாசடைவது பற்றி
விவசாயிகளும், அரசாங்கமும் சிந்திப்பதில்லை. பீடை கொல்லிகள் பாவிப்பதால் அயற் பிரதேசங்களுக்கு அண்மையில் உள்ள ஆறுகளில் கலை நாசினிகள் கலக்கப்படுகின்றது. இதனால் பாரிய விளைவு ஏற்படுகின்றது.
மேலும் அன்றைய காலகட்டங்களில் எவ்வித அபிவிருத்திகளும் காணப்படவில்லை . அன்று நீர் கூட மாசடைந்ததில்லை ஆனால் இன்று இலகுவான வழிகளில்
மாசுபடுத்தப்படுகின்றது. மேலும் தொழிற்சாலைகளிலுள்ள நச்சு வாயுக்கள் அல்லது கழிவுகள்
வெளியேற்றப்படுகின்றது. இதனால் இவை நீரிலே கலக்கப்பட்டு நீர் மாசடைகின்றது.
No comments:
Post a Comment