Thursday, May 18, 2023

ஆடம்பர வாழ்க்கை

 

ஆடம்பர வாழ்க்கை

 ஒரு மனிதன்  பிறந்தது முதல் மரணம் வரை அவனது வாழ்க்கையை மற்றவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக அமைக்கலாம் என்று உங்கள் மனதில் தோன்றலாம்.

 என்னடா இவன் சிறப்பு என்றான் வாழ்க்கை என்றான் ஒன்றுமே புரியல… என்று சிந்திப்பீர்கள்

 உண்மைதான்….

 ஒரு மனிதன் சிறப்பாக இருப்பதற்கு பணம் முக்கிய ஒன்றாக உள்ளது. இந்த உலகம் பணக்காரனை மதிக்கும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும், திருமணம் வரும்போது பத்திரிகையை முதலில் கொண்டு போய் சேர்க்கும், பணக்காரனுக்கு ஒன்று என்றால் முழு ஊறுமே அவருக்காக பிரார்த்தனை செய்யும், அழும்

 உதாரணமாக:-

 ஊரில் இருக்கும் ஒரு படித்து பட்டம் பெற்ற ஒருவரை சிந்தித்துப் பாருங்கள்…

 அவர் பல மேடைகளிலும், பல பேட்டிகளிலும், பல பரிட்சைகளிலும், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடத்திலும் சிறந்தவராக இருந்தாலும் அவரிடம் காசு, பணம் இல்லை என்றால் அவரை கணக்கெடுக்க மாட்டார்கள், அவரை மதிக்க மாட்டார்கள், அவரின் தீர்வுகள் அவ்விடத்திற்குப் பொருந்தாது…

 அதே ஒரு படிக்காத ஒருவர் ஏதோ ஒரு வகையில் தொழில், வியாபாரம் செய்து கை நிறைய பணம் சம்பாதித்து விலை உயர்ந்த ஆடைகளையும் விலையுயர்ந்த சப்பாத்துக்களையும் விலை உயர்ந்த கடிகாரத்தையும் கையில் கட்டிக்கொண்டு கழுத்தில் அரை கிலோ தங்கத்தை போட்டுக்கொண்டு கை விரல்களில் தங்க மோதிரங்களையும் போட்டுக் கொண்டு பெருமதி மிக்க கார் ஒன்றில் எல்லா இடத்துக்கும் சுற்றித் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தால் அவரை இவ்வுலகம் தூக்கிக் கொண்டாடும். அவர் பின்னால் ஆயிரம் பேர் நிற்பார்கள். பிரச்சனைகளின் போது அவரின் தீர்ப்பே சரியாக இருக்கும். இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம்.

 எனவே சிறந்த முறையில் கல்வியை கற்று சிறந்த முறையில் சிந்தித்து பணம் சம்பாதித்து ஆடம்பரமாக சமூகத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மனிதராக வாழ்ந்து காட்டுவோம்.

 நன்றி


2 comments:

  1. பணம் நாம் வாழ தேவைப்படுகிறது நமக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவு இருந்தால் போது பணத்தினால் நமக்க்கு கிடைக்கு சிறப்பும் பெருமையும் நமக்கு தேவையில்லை என்பதுதான் என் கருத்து

    ReplyDelete