Friday, March 29, 2024

இஃப்த்தார் நிகழ்ச்சி 2024

 MEDS இஃப்த்தார் நிகழ்ச்சி 2024

 2024/03/29 வெள்ளிக்கிழமை இன்று மிகப் பிரமண்டமான இஃப்த்தார் நிகழ்வொன்று பரகஹகொடுவ MEDS நிறுவனத்தில் நடைபெற்றது.


(துஆவை கேட்பதற்கு கீழே link a click செய்யவும்.

அப்துல்லாஹ் பாசிம் மௌலவி துஆ

துஆ

துஆவை கேட்பதற்கு மேலே link a click செய்யவும்.)












எமது MEDS நிறுவனத்தின் மர்ஹும் லத்தீப் அதிபர், மர்ஹும் ரவ்ப் அதிபர், மர்ஹும் நளீப் ஹாஜியார்,மர்ஹும் பாரிக் ஆசிரியர்களுக்காக விசேடமாக யாசின் ஓதி, மேலும் சமூக சேவையாளர்களுக்காகவும், எமது ஊர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காகவும், எமது MEDS மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும், முக்கியமாக பலஸ்தீன் மக்களுக்காகவும் விசேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.  














இன் நிகழ்வில் MEDS நிறுவனத்தின் தலைவர் முதல் உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள், பள்ளி தலைவர், மசூரா சபை உறுப்பினர்கள் என அனைவரும் தாங்கள் குடும்பம் சகிதமும், எமது MEDS மாணவ, மாணவிகளும் மேலும் ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





 இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு எமக்கு அனுசரணை வழங்கிய மதிப்புக்குரிய மர்ஹும் AB லத்தீப் ஆதிபர் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு MEDS நிறுவனம் சார்பாக நன்றிகள். 

JAZAKALLAH HAIRA



MSM imthihas_Paragahakotuwa 

Wednesday, March 27, 2024

பத்ர் யுத்தம் - தமிழ்

 பத்ர் யுத்தம் - தமிழ்



புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

🛑 1440 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு தினமான ரமழான் மாதம் பிறை 17 ல்தான் இந்த மண்ணில் தருமம் வாழ்வதா அதர்மம் வாழ்வதா என்று  முடிவுக்கு வந்தது. அல்லாஹ்வின் நாமம் உலகெங்கும் ஒலிக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 


நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.


பத்ர் போரின் பின்னணி'அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123) முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)





🛑 முஸ்லிம்களின் படை நபிகளாரின் தலைமையிலும், குரைஷி காபிர்களின் படை அம்ர் பின் ஹிஷாம் தலைமையிலும் பத்ர் என்ற இடத்தில் மோதிக் கொண்டன. பத்தர் என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் அமைந்துள்ள பிரபலமான ஒரு நீர் தடாகம் அமைந்துள்ள இடமாகும்.



🛑 இராணுவ பலம் 

⚖ முஸ்லீம் படைகள்: 

🤺 313 - 340 க்கும் இடைப்பட்ட வீரர்கள்.

🏇 இரண்டு குதிரை வீரர்கள்.


 ⚖ குரைஷி காஃபிர் டடைகள்:

🤺 1,000 வீரர்கள்.

🏇 100 - 200 க்கும் இடைப்பட்ட குதிரை வீரர்கள்.




🛑 யுத்த இழப்புகள்:

முஸ்லிம் படைகளில் 14 வீரமரணங்கள்.

6 பேர் புலம்பெயர்ந்தோர் (முஹாஜிர்கள்)

8 பேர் மதீனா வாசிகள்(அன்ஸாரிகள்)


குரைஷி காஃபிர் படைகள்: 

70 சாவுகள்.

70 யுத்த கைதிகள்.



இம்திஹாஸ்

பரகஹகொடுவை 

Monday, March 25, 2024

Former National Football Team Captain FAZAL Announces his Retirement / Fazal Football

Former National Football Team Captain FAZAL Announces his Retirement





Former National Football Team Captain FAZAL announces his retirement from International Football from 2024/03/25. 


Fazal will play his last International game today 2024/03/25. against Bhutan in the prestigious FIFA Series 2024. 


Fazal was a member of the Senior National Team from 2008 to 2024. He was the Captain of the National Team in 2018 - 2019. Fazal played over 53 International matches before he hung his shoes. 


FFSL President , Executive Committee, Coaching staff, Fans and entire football family thank FAZAL for his meritorious contribution to Sri Lanka Football.

Most elegant farewell to Fazal by FFSL



MSM Imthihas.




Sunday, March 24, 2024

How to earn Money for Crypto currency 2025

How to earn Money for Crypto currency 2025


 "Crypto Crossroads: Navigating the New Frontier"


In a world captivated by the allure of cryptocurrency, three friends, Sarah, Alex, and Lily, found themselves at a crossroads of curiosity and uncertainty. Sarah sparked the conversation about the latest crypto craze, prompting Alex to delve deeper into the complex world of digital currencies. Despite initial excitement, Alex struggled with the dizzying array of coins and tokens flooding the market.


As Alex immersed himself in research, he shared his newfound knowledge with Lily, igniting her interest in non-fungible tokens (NFTs). Together, they explored the innovative realm of digital art and collectibles, captivated by the possibilities enabled by blockchain technology.


Their journey led them to attend a crypto conference, where they listened to experts discuss the transformative potential of blockchain while grappling with concerns about its environmental impact. Despite the insights gained, they couldn't shake the feeling of uncertainty looming over their crypto endeavors.


In moments of reflection, Sarah, Alex, and Lily realized that navigating the crypto landscape required more than just enthusiasm—it demanded patience, diligence, and a willingness to confront the complexities and risks inherent in this evolving ecosystem. As they contemplated their next steps, they acknowledged the need for ongoing learning and adaptation, recognizing that their crypto journey was not just about chasing profits but about embracing the opportunities and challenges of a new financial frontier.


Join us :-

Learn Spoken Tamil, Learn Spoken Sinhala

 ( Us, Canada, the Uk, Switzerland,Sweden, Norway, New Zealand, Australia, the Netherlands, Luxembourg, Ireland, Germany, France, Finland, Denmark, Belgium Austria, Spain, and Italy )

Chinnapgk1@gmail.com

Child rearing from an Islamic perspective / இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் குழந்தை வளர்ப்பு /Abdulhudha Inullah (Nulari)

PARAGAHAKOTUWA MUHIYADEEN MUSJID இல் இடம் பெற்ற சிறப்பு பயான்.







இன்று Kurunegala, Narammala, PARAGAHAKOTUWA MUHIYADEEN MUSJID இல் இடம் பெற்ற பெண்களுக்கான சிறப்பு பயான்.


தலைப்பு :-  இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் குழந்தை வளர்ப்பு.

Topic  :- Child rearing from an Islamic perspective


Al-Haji MAM. Inullah (Nulari)

அல்ஹாஜ். எம்.எ.எம் ஐனுல்லாஹ் (நுளாரி)

Do you want to listen Bayan please touch me

பயானை கேட்பதற்கு கீழே உள்ள Bayan Mp3 - பயான் Mp3   எனும் Link ஐ  கிளிக் செய்யவும்.


 Bayan Mp3 பயான் Mp3





MSM IMTHIHAS





Friday, March 22, 2024

அகில இலங்கை ரீதியில் கட்டுரைப் போட்டியில் முதலிடம் டி. பாத்திமா ஷஹாமா சாதனை.

உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் T.பாத்திமா ஷஹாமா சாதனை.



அகில இலங்கை ரீதியில் கட்டுரைப் போட்டியில் முதலிடம்  பெற்று டி. பாத்திமா ஷஹாமா பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி டி. பாத்திமா ஷஹாமா முதலிடம் பெற்றுள்ளார்.


மேலும் பரிசளிப்பு விழா இன்று கொழும்பில் (22.03.2024) நடைபெற்றது.



முதுமையை எப்படி எதிர்கொள்வது? / How to face old age?

 60 வயதிற்கு பிறகு எப்படி வாழலாம்?

நீங்கள் பார்க்க இருக்கும் இந்த விடயம் முதியோர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உதவும். 


How to face old age? முதுமையை எப்படி எதிர்கொள்வது?

 

ஒருவரின்பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என்பதை இப்போதே தெரிந்து வைத்திருப்பது எமக்கு எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.


1.முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள்.

இவ்வாறு இருக்க நமக்கு அடுத்த தலைமுறையினர் அவரவர் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் / இறந்து விட்டால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.

ஆகவே இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து அதை எதிர்கொள்ளவும் தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.



2. காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.

நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும் முதுமை உங்களை ஒருசாதாரண சராசரி வயதான மனிதராக மாற்றி விடும்.

நீங்கள் மெது மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு மறக்கப் படுவீர்கள்.

உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்.




3. அழையா விருந்தாளியாகவும், பல வகை நோய்களும், உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும்.


நேரத்துக்கு தேவையான மருந்துகளை தவறாமல்  எடுத்து கொள்ளவும், கிளினிக்களுக்கு தவராமல் செல்லவும் மறவாதீர்கள். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெறுங்கள்.

ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.



4. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் தாய் இருந்தாள். ஆனால் இந்த படுக்கை யில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நேர்ஸ்கள், மகள், மருமகள் போன்றவர்கள் இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டி, அவர்கள் உங்களுக்கு தேவையான பணியினை செய்து முடிக்க நீங்கள் அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.





5.கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

மிக முக்கியமாக, உலக பற்றற்று வாழப் பழகுங்கள்.

வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.

ஆகவே 5 நேர தொழுகையை கடைப்பிடித்து, குர்ஆன், திக்ர் உடன் ஏக மனதோடு ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகைக்காக கார்த்து கொண்டிருங்கள்.


 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று தற்போது புரிந்திருக்கும். உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள். நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக் கவலைப் படாதீர்கள்.


ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் தேவை இல்லாமல் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்.


இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள். பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு  

இனி வரப்போகும் இறுதி நாட்களும் இனிமையாக இருக்க பிரார்த்தியுங்கள்.


 MSM IMTHIHAS