Tuesday, May 23, 2023

முத்திரை வாசிப்பு - மன்னர் சார்லஸ் 3 முடிசூடு || King Charles 3 coronation stamps

அறிமுகம் :-       இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் வேல்ஸ் இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6, 2023 நடைபெற்றது. 

74 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர் மே 6, 2023 (சனிக்கிழமை) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூடப்பட்டார்.

இந்த முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 100 அரச தலைவர்கள் உட்பட சுமார் 2,200 விருந்தினர்கள் பங்கேற்றி உள்ளனர்.

மன்னன் சார்லஸின் இரண்டாவது மகனான சசெக்ஸ் பிரபு இளவரசர் ஹரி, முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து பிரிட்டன் வந்தடைந்தார்கள்.

அரச குடும்பத்தின் தற்போதைய பங்கை பிரதிபலிக்கும் வகையில் முடிசூட்டு விழாவின் சில அம்சங்கள் நவீனப்படுத்தப்பட்டாலும், 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் காணப்பட்ட நீண்டகால மரபுகள் இம்முறையும் கடைபிடிக்கப்பட்டன.

கிங் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வருகை தரும் போது இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வீதியின் இருபுறங்களிலும் பெருந்திரளான மக்கள் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு முத்திரை வெளியிடு மே 6, 2023:-  


மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில் நான்கு புதிய முத்திரைகளும் சிறப்பு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது , மேலும் இவைகள் ராஜாவின் இதயத்திற்கு நெருக்கமான காரணங்களைத் தழுவிய முத்திரைகளாக உள்ளன.

இவை ஒரு மினியேச்சர் தாளில் வழங்கப்பட்டுள்ளது, ராயல் மெயில் முடிசூட்டு முத்திரைகளை வரலாற்றில் மூன்றாவது சந்தர்ப்பமாக வெளியிட்டுள்ளனர். மேலும் முதல், இரண்டாவது வெளியீடுகள் முந்தைய ஜார்ஜ் VI மற்றும் ராணி எலிசபெத் II ஆகியோருக்கு வெளியிடப்பட்டது.

முத்திரைகள்: -

  1.  முடிசூட்டு விழா,
  2.  பன்முகத்தன்மை மற்றும் சமூகம்,
  3. காமன்வெல்த் மற்றும்
  4. நிலைத்தன்மை என்பன ஆகும்.

முடிசூட்டு முத்திரை:-

செயின்ட் எட்வர்டின் கிரீடம் ராஜாவின் தலையில் இறக்கப்படும் தருணத்தை முடிசூட்டு முத்திரை சித்தரிக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு முன்னால், மேலே வானவேடிக்கைகள் மற்றும் பின்னணியில் துப்பாக்கி சல்யூட்களுடன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மக்கள் தெரு விருந்தில் கலந்துகொண்டு விழாவை ஒரு பெரிய திரையில் பார்க்கிறார்கள். 


பன்முகத்தன்மை மற்றும் சமூகம்:-

பிரித்தானியாவின் பல சமய சமூகம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை மற்றும் சமூக முத்திரை, யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, இந்து மற்றும் பௌத்த மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களைக் கொண்டுள்ளது, மேலும் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பல வழிபாட்டுத் தலங்கள் உட்பட கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிரிட்டனின் அம்சங்களை பின்னணி காட்டுகிறது.


காமன்வெல்த் முத்திரை:-

காமன்வெல்த் முத்திரையானது உலகளாவிய வர்த்தகம், ஒத்துழைப்பு, ஜனநாயகம் மற்றும் அமைதியின் கருப்பொருளை பிரதிபலிக்கிறது. படங்களில் கற்பனை செய்யப்பட்ட காமன்வெல்த் கூட்டம், காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரதிநிதித்துவம், காமன்வெல்த் நாடுகளின் சில கொடிகள் மற்றும் காமன்வெல்த் போர் கல்லறைகள் கல்லறை ஆகியவை அடங்கும்.


நிலைத்தன்மை:-

நிலைத்தன்மை மற்றும் பல்லுயிர் முத்திரை இயற்கை நிலப்பரப்புகளை நிலையான விவசாய முறைகளுடன் சித்தரிக்கிறது மற்றும் நீர்மின் சக்தி மற்றும் சோலார் பேனல்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு காடுகளின் படங்கள், காட்டுப்பூ புல்வெளிகள் மற்றும் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் வனவிலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன, அதே சமயம் பாரம்பரிய கைவினைகளான ஹெட்ஜ்-லேயிங் மற்றும் தேனீ வளர்ப்பு போன்றவையும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.


இந்த முத்திரைகள் அட்லியர் ஒர்க்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் பிரிட்டிஷ் கலைஞரான ஆண்ட்ரூ டேவிட்சன் புதிதாக நியமிக்கப்பட்ட மர வேலைப்பாடுகளைக் கொண்டதாக வடிவமைத்துள்ளார்.

மினியேச்சர் ஷீட் பின்னணி வடிவமைப்பு, டேவிட்சன் புதிதாக நியமிக்கப்பட்ட மர வேலைப்பாடுகளுடன், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு நாடுகளின் அடையாளமாக ஒன்றோடொன்று இணைந்த பசுமையாக சித்தரிக்கிறது: ரோஜா, திஸ்ட்டில், டாஃபோடில் மற்றும் ஷாம்ராக். என ராயல் மெயிலின் தலைமை நிர்வாகி சைமன் தாம்சன் கூறினார்: “முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் இந்த நினைவு தபால் முத்திரைகளை வெளியிடுவதில் ராயல் மெயில் பெருமிதம் கொள்கிறது, மேலும் அவரது பல ஆண்டுகால பொது சேவையில் அவரது மாட்சிமை பெற்ற சில காரணங்கள்.

முத்திரைகள் www.royalmail.com/coronation என்ற இணையதளத்திலும், 03457 641 641 என்ற தொலைபேசி எண்ணிலும், இங்கிலாந்து முழுவதும் உள்ள 7,000 தபால் அலுவலகக் கிளைகளிலும் கிடைக்கும்.

நன்றி

எம். எஸ். எம் இம்திஹாஸ்


Sunday, May 21, 2023

வாசிப்பு மனிதனை மனிதனாக மாற்றும்!..

 

வாசிப்பு ஒருவனைப் பூரண மனிதனாக்குகிறது என்பது அறிஞர் வாக்கு. வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல.   நூல்கள் மனிதனின் சிறந்த நண்பன்.   வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது.




பேரறிஞர்கள் பலர் தம் வாசிப்புப் பழக்கத்தினாலேயே வாழ்வில் உயர்வடைந்தனர். வாசிப்புப் பழக்கம் ஒருவனது உளநலத்தையும் உடல்நலத்தையும் மட்டுமன்றி ஆன்மீக நலத்தையும் பேண வழிவகுக்கிறது. ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக  முடியும். ஒரு சிறந்த எழுத்தாளறினால் மட்டுமே சிறந்த பேச்சாளறாக முடியும். மேலும் அறிவைப்பெற, மன அமைதிபெற, புதிய தகவல்களை அறிந்து கொள்ள வாசிப்புப் பழக்கம் பெரிதும் உதவுகிறது. ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும்.

 

இன்று வாசிப்புப் பழக்கம் முற்றாக அழிந்து வருகிறது. Smart Phones, Tabs, Computers, Laptops, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள் இவற்றைப் பயன்படுத்துவதிலேயே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. கிராமங்களிலும் குடிசைகளிலும் இவற்றின் ஆதிக்கம் இன்று பெருகியுள்ளது. இதன் காரணமாக நூல்கள், சஞ்சிகைகளை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே பாரியஅளவில் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன்   மனதில், அறிவில், அறியாமை இருள் படிந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. இதேபோன்று புதிய  விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது.

 

மேலும், நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக  அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றது.

“கண்டது கற்கட் பண்டிதனாவான்

என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். காணும் நூல்களையெல்லாம் கற்பதன் மூலம் ஒருவனது அறிவு பன்மடங்கு பெருகும் என்ற கருத்தையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

"ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை  மூடப்படுகிறது!"

என்று வீவேகானந்தர் கூறியுள்ளார். உலகில்  தோன்றிய எல்லாத் தலைவர்களும் வாசிப்பதன்  மூலம் தம்மை முழுமைப்படுத்திக் கொண்டவர்களாவார்கள்.

 

 

‘ஒருகோடி ரூபாய்  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்!? என ‘மகாத்மா காந்தி’ கூறியுள்ளார். இதே போன்றுதான், உலகின் தலைச்சிறந்த  தத்துவ ஞானியான சோக்ரடீஸ்’ தனக்கு நஞ்சூட்டப்படும் வரை வாசித்துக் கொண்டு இருந்தார் என்று வரலாறுகள் கூறுகின்றது. வாசிப்பதன் மூலம் ஒருவனது மொழித்திறன் விருத்தி, சொல்வான்மை, பொது அறிவு வளர்ச்சி, தன்னம்பிக்கை, ஆளுமை விருத்தி, ஞாபகசக்தி, அதிகரிப்பு, கிரகித்தல் என்பன எம்முன் வளர்கிறது.

 

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளப் பல உத்திகளைக் கையாளுகிறார்கள். புத்தகக் கண்காட்சி நடத்துதல், ‘வாசிப்பு மாத’ நிகழ்ச்சிகளை நடத்துதல். நூலக தினம் கொண்டாடுதல் போன்றவைகள்  அவற்றுட் சிலவாகும். நூலகங்கள் நம் அறிவை வளர்த்திடும் அரும் பொக்கிஷங்கள். அங்கு தினந்தோறும் சென்று நாம் விரும்பிடும் நூல்களைப் பெற்று வாசிக்க முடியும். நூலகங்களில் காலத்துக்குக் காலம் வெளிவரும் புத்தம் புதிய நூல்களை நாம் காணமுடியும்.

 

பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தலில் பெற்றோர்கள் பெரும்பங்கு வகித்திட வேண்டும். இளமை முதல் நல்ல நூல்களைப் படிக்குமாறு பிள்ளைகளுக்குப் பெற்றோர் அறிவுரை கூற வேண்டும். நல்ல நூல்கள் பலவற்றை வாங்கித் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். தாமும் ஓய்வு நேரங்களில் நூல்களை வாசிப்பதன மூலம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும். பெற்றோர்கள் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாயிருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் பின்பற்றுவர்.  எனவே பெற்றோர் தாம் நூல்களைப் பெற்று வாசிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பதோடு பிள்ளைகளையும் வாசிக்கும்படி தூண்டுதல் அளிக்கவேண்டும்.

 

எனவே, ஆளுமைமிக்க இளம் சந்ததியினரை உருவாக்க வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடத்தில் வளர்த்திட வேண்டும். ஆகவே வாசிப்பு மனிதனை மனிதனாக மாற்றும்

 

நன்றி

Diploma in Translation and Interpretation - 2023 @ University of Kelaniya

 Diploma in Translation and Interpretation - 2023 @ University of Kelaniya


Closing Date : 2023.06.23





Saturday, May 20, 2023

Diploma in Tourism and Hospitality Management




Download Application :- https://drive.google.com/file/d/1m1X0QlOVYzWCBnbfynuzACsVX2ew29di/view?usp=drivesdk



Details:- https://www.codl.jfn.ac.lk/index.php/diploma-in-tourism-and-hospitality-management/




Diploma in Translation and Interpretation course university of Kelaniya 2023

 Applications are invited for the Diploma in Translation and Interpretation course for the year 2023 from university of Kelaniya.


Applications
from 22 May 2023 to 23 June 2023

Available Courses
Tamil - Sinhala
English - Sinhala

Course Duration
One Year
9 am to 4 pm

Fee 65 000

Qualifications
Passed GCE A/L

Further Details are attached Below


𝑬𝒎𝒑𝒐𝒘𝒆𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒊𝒈𝒉𝒆𝒓 𝒆𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒉𝒆𝒓𝒆 𝒂𝒕 𝑻𝑯𝑬 𝑶𝑼𝑺𝑳!!

 🔥 𝐄𝐗𝐓𝐄𝐍𝐃𝐄𝐃 


📌 𝑪𝒂𝒍𝒍𝒊𝒏𝒈 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔!!📌


𝑬𝒎𝒑𝒐𝒘𝒆𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒊𝒈𝒉𝒆𝒓 𝒆𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒉𝒆𝒓𝒆 𝒂𝒕 𝑻𝑯𝑬 𝑶𝑼𝑺𝑳!!


Faculty of Management Studies offers the MBA in Human Resource Management for those who wish to fulfill their professional career dreams.





Application issuing period: 𝟐𝟑𝐫𝐝 𝐀𝐩𝐫𝐢𝐥 𝟐𝟎𝟐𝟑 – 𝟎𝟔 𝐉𝐮𝐧𝐞 𝟐𝟎𝟐𝟑

Duration: 𝟐 𝐲𝐞𝐚𝐫𝐬


𝗙𝗼𝗿 𝗺𝗼𝗿𝗲 𝗱𝗲𝘁𝗮𝗶𝗹𝘀:

☎ : 0112 881 008 / 0112 881 000

🌐 : https://ou.ac.lk/mbahrm/


#MBA #MBAHRM #OUSLMBA #HRM #HumanResource #Masters #Management #ManamgenetStudies #Student #professional

Diploma in English Language & Literature - 2023/2024 @ Open University of Sri Lanka

 Diploma in English Language & Literature - 2023/2024 @ Open University of Sri Lanka


Details: https://ou.ac.lk/dell/


Closing Date: 2023.06.20





Thursday, May 18, 2023

ஆடம்பர வாழ்க்கை

 

ஆடம்பர வாழ்க்கை

 ஒரு மனிதன்  பிறந்தது முதல் மரணம் வரை அவனது வாழ்க்கையை மற்றவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக அமைக்கலாம் என்று உங்கள் மனதில் தோன்றலாம்.

 என்னடா இவன் சிறப்பு என்றான் வாழ்க்கை என்றான் ஒன்றுமே புரியல… என்று சிந்திப்பீர்கள்

 உண்மைதான்….

 ஒரு மனிதன் சிறப்பாக இருப்பதற்கு பணம் முக்கிய ஒன்றாக உள்ளது. இந்த உலகம் பணக்காரனை மதிக்கும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும், திருமணம் வரும்போது பத்திரிகையை முதலில் கொண்டு போய் சேர்க்கும், பணக்காரனுக்கு ஒன்று என்றால் முழு ஊறுமே அவருக்காக பிரார்த்தனை செய்யும், அழும்

 உதாரணமாக:-

 ஊரில் இருக்கும் ஒரு படித்து பட்டம் பெற்ற ஒருவரை சிந்தித்துப் பாருங்கள்…

 அவர் பல மேடைகளிலும், பல பேட்டிகளிலும், பல பரிட்சைகளிலும், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடத்திலும் சிறந்தவராக இருந்தாலும் அவரிடம் காசு, பணம் இல்லை என்றால் அவரை கணக்கெடுக்க மாட்டார்கள், அவரை மதிக்க மாட்டார்கள், அவரின் தீர்வுகள் அவ்விடத்திற்குப் பொருந்தாது…

 அதே ஒரு படிக்காத ஒருவர் ஏதோ ஒரு வகையில் தொழில், வியாபாரம் செய்து கை நிறைய பணம் சம்பாதித்து விலை உயர்ந்த ஆடைகளையும் விலையுயர்ந்த சப்பாத்துக்களையும் விலை உயர்ந்த கடிகாரத்தையும் கையில் கட்டிக்கொண்டு கழுத்தில் அரை கிலோ தங்கத்தை போட்டுக்கொண்டு கை விரல்களில் தங்க மோதிரங்களையும் போட்டுக் கொண்டு பெருமதி மிக்க கார் ஒன்றில் எல்லா இடத்துக்கும் சுற்றித் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தால் அவரை இவ்வுலகம் தூக்கிக் கொண்டாடும். அவர் பின்னால் ஆயிரம் பேர் நிற்பார்கள். பிரச்சனைகளின் போது அவரின் தீர்ப்பே சரியாக இருக்கும். இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம்.

 எனவே சிறந்த முறையில் கல்வியை கற்று சிறந்த முறையில் சிந்தித்து பணம் சம்பாதித்து ஆடம்பரமாக சமூகத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மனிதராக வாழ்ந்து காட்டுவோம்.

 நன்றி


Monday, May 15, 2023

Vincent van Gogh – Stamps Reading – முத்திரை வாசிப்பு - வின்செண்ட் வான் கோ

 


Stamps reading - Vincent van Gogh – முத்திரை வாசிப்பு - வின்செண்ட் வான் கோ 

மனிதனின் வாழ்நாளில் இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னல்களையும், துன்பங்களையும் தாண்டி வெற்றி பெறுபவர்களை தான் வரலாறும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது.



கஷ்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாம் பார்க்க இருக்கும் வரலாற்று நாயகர் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர் வாழ்ந்தபோது அவரது திறமையை துச்சமாக, மதித்த உலகம் அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது திறமையை மற்ற கலைஞர்களுக்கு அளவுகோலாக பயன்படுத்துகிறது. இப்போது அவரது படைப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர் . அவர்தான் ‘Expressionism’ என்ற ஓவிய, கலை பணியை உலகுக்கு அறிமுகம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வின்செண்ட் வான் கோ (Vincent Van Gogh). இவர் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் Groot-Zundert-ல் பிறந்தார்.

பல வரலாற்று பிரபல்யங்கள் போல அவரும் ஏழ்மையில்தான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கி இருந்தது. சரியாக ஓரு வருடத்துக்கு முன்னர் அதே திகதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனதுதான் அந்த சோகத்திற்கு காரணம். அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே பெற்றோர் அவருக்கும் வைத்தனர். அவருக்கு விபரம் தெரிய வரும் போது ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட ஆரம்பித்தது.

அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற நினைப்பு அதற்கு காரணமாயிருந்தது. வான் கோவின் தந்தை ஒரு மதபோதகராக இருந்தார் அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோவக்காரணக , முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.

வான் கோவிற்கு 16 வயதானபோது அவரது பெற்றோர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருக்கு படிப்பின் மீது விருப்பம் இல்லை. எனவே அவரை வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது விருப்பம் ஏற்பட்டது. இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. அதனால் வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ. தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஒரு வருடம் Wasmes என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபட்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டு கடும் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார் . அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.

பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத அந்த சமயத்தில் அவர் பிழைப்புக்காக லண்டனுக்கு சென்றார். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. அவரது கவனம் விலைமாதர்களின் பக்கம் திரும்பியது. தனக்கென ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்பிய அவர் அவர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொருத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார்.

33 வயதில் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியனாகலாம் என்று முடிவெடுத்தார். அப்போதும் அவருடன் கூடவே இருந்தது வறுமை மட்டும்.சகோதரன் அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டியவர் வான் கோ. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை இருந்தும் ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், Gatwick ஓவியங்கள். Renaissance ஓவியங்கள், Impressionism ஓவியங்கள் இதுதான் ஓவியங்களின் பரினாமங்களாக இருந்தது. அதில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. ‘Expressionism’ என்ற புதியபணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருந்தது. அவர் வரைந்த சூரியகாந்தி பூ ஓவியம் உலகப்புகழ் பெற்றது.

வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 ஸ்கெட்ச் ஓவியங்களையும், 800 Oil Paintings எனப்படும் எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் சோகம் என்னவென்றால் எவ்வளவு நிறைய ஓவியங்கள் வரைந்தாலும் ஒரே ஒரு ஓவியத்தைதான் அவரால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று வரலாற்றுக்குறிப்புக்கள் கூறுகிறது. அவரது ஓவியங்களை உலகம் கண்டுகொள்ளாததற்கு அவரது மனச்சோர்வு ஒரு காரணமாக இருந்திருக்க காரணமாக இருக்கலாம். ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது அவர் என்ன செய்தார் தெரியுமா? கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். விசித்திரமாக இருந்தாலும் உண்மை. மனச்சோர்வால் எவ்வுளவு ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர் அந்த காரியத்தை செய்திருப்பார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தையே வரைந்தார் வான் கோ.

அவரது மனச்சோர்வு அதிகரித்து மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார் அவர். வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே வாழ்ந்த அவர் 1890 ஆம் ஆண்டு சோகமான முறையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று கூறுகிறது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற critics ஓவிய ஏலத்தில் வான் கோவின் ‘Portrait of Dr. Gache’ என்ற ஓவியம் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உலகின் செல்வந்தர்களும், புராதன ஓவியங்களை சேகரிப்பவர்களும் வான் கோ பூர்த்தி செய்யாமல் விட்டுப்போன ஓவியங்களுக்குகூட பல மில்லியன் டாலர் கொடுக்க போட்டி போடுகின்றனர்.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களால்கூட உலகை வெல்லும் படைப்புகளை தர முடியும் என்பதுதான் வான் கோவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.

நாம் நமது குறைகளை நினைத்து சரிந்து விழாமல் நிறைகளை நினைத்து நிமிர்ந்து நின்றால் நம்மாலும் விளக்கில் எரியும் நெருப்பாக நிமிர்ந்து எரிய முடியும். வாழும்போதுதான் வானம் வசப்பட வேண்டும் என்று இல்லை மறைந்த பிறகும் வரலாறு நம்மை நினைத்துப்பார்த்தால் அதுவே வானம் வசப்பட்டதற்கு சமமாகும்..


எனவே இவரின் நினைவையோட்டி “வான் கோக் இன் ஸ்ரீலங்கா – VAN GOGH In Sri Lanka” என்ற தலைப்பில் இந்த கலைஞரின் மாதிரி ஓவியங்கள் நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் அமைந்துள்ள ஸ்கை கேலரி ஸ்டுடியோவில், 2023 மே 11 முதல் 21 வரை காலை 10 மணி முதல் மாலை வரை. 5 வரை இலவச கண்காட்சி ஒன்று ஏற்படு செய்துள்ளனர் (නාරාහේන්පිට, කිරුල පාරේ පිහිටි Sky Gallery චිත්‍රාගාරයේදී මේ අපුර්ව කලාකරුවගේ ආදර්ශ සිතුවම් ‘Van Gogh In Sri Lanka’ නමින් 2023 මැයි 11 සිට 21 දක්වා පෙ.ව. 10 සිට ප.ව. 5 දක්වා නොමිලයේ ප්‍රදර්ශනය කෙරේ.) என்பதும் குறிப்பிடத்தக்காது.



SKY ගැලරිය: 65/9, කිරුළ පාර, කොළඹ 5. අමතන්න: 0777329596.


Sunday, May 14, 2023

Enrollment of Students for the Higher National Diploma in Agricultural Production Technology in Sri Lanka Schools of Agriculture – 2023

Enrollment of Students for the Higher National Diploma in Agricultural Production Technology in Sri Lanka Schools of Agriculture – 2023


කෘෂිකාර්මික නිෂ්පාදන තාක්ෂණය පිළිබඳ උසස් ජාතික ඩිප්ලෝමා පාඨමාලාව - ශ්‍රී ලංකා කෘෂිකර්ම විද්‍යාල - 2023


விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி - இலங்கை விவசாயப் பாடசாலை - 2023




Application Deadline:

29 May 2023


Download PDF



Agriculture Schools:

- Angunakolapelessa

- Karapincha

- Kundasale

- Pelwehera

- Vavuniya


*Note:*

Gazette available in Tamil & Sinhala


Saturday, May 13, 2023

Diploma in Software Engineering - 2023 Intake @ NAITA

 Diploma in Software Engineering - 2023 Intake @ NAITA






Application: https://naita.gov.lk/application-of-software-engineering-diploma-2023-intake/


Closing Date: 2023.05.28

Diploma in Banking and Finance - 2023 @ University of Jaffna

 Diploma in Banking and Finance - 2023 @ University of Jaffna









Application: https://www.codl.jfn.ac.lk/index.php/application-for-the-diploma-in-banking-and-finance-batch-ii/


Closing Date: 2023.06.10

එදිනෙදා කටයුතු වලට අවශ්‍ය Spoken English

 විදෙස් ගතවීමට

වැඩිදුර අධ්‍යාපනයට

ව්‍යාපාර සංවර්ධනයට 

රැකියාවේ උසස් වීමට 
එදිනෙදා කටයුතු වලට අවශ්‍ය Spoken English



පාඨමාලා ආරම්භය මැයි 15

පාඨමාලා කාලය මාස 3යි

සඳුදා හා බ්‍රහස්පතින්දා රාත්‍රී 8.00  - 10.00


පාඨමාලා ගාස්තු රු. 5000යි

(වාරික වශයෙන් ගෙවන්න)


වැඩි විස්තර සදහා අමතන්න 

0112987743 / 0705202009

𝑪𝒂𝒍𝒍𝒊𝒏𝒈 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒇𝒐𝒓 𝑪𝑬𝑴𝑩𝑨 / 𝑪𝑬𝑴𝑷𝑨 ?

 📌 𝑪𝒂𝒍𝒍𝒊𝒏𝒈 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒇𝒐𝒓 𝑪𝑬𝑴𝑩𝑨 / 𝑪𝑬𝑴𝑷𝑨 📌


Empower your higher educational expectations here at THE OUSL!!



A leading national university which provides education through open and distance learning methodology.   


𝗧𝗵𝗲 𝗖𝗼𝗺𝗺𝗼𝗻𝘄𝗲𝗮𝗹𝘁𝗵 𝗘𝘅𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲 𝗠𝗕𝗔 𝗮𝗻𝗱 𝗠𝗣𝗔 𝗮𝗿𝗲 𝘁𝘄𝗼 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘄𝗲𝗹𝗹-𝗲𝘀𝘁𝗮𝗯𝗹𝗶𝘀𝗵𝗲𝗱 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿’𝘀 𝗗𝗲𝗴𝗿𝗲𝗲 𝗽𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲𝘀 𝗼𝗳𝗳𝗲𝗿𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗲 𝗙𝗮𝗰𝘂𝗹𝘁𝘆 𝗼𝗳 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 𝗦𝘁𝘂𝗱𝗶𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗢𝗨𝗦𝗟 𝗶𝗻 𝗽𝗮𝗿𝘁𝗻𝗲𝗿𝘀𝗵𝗶𝗽 𝘄𝗶𝘁𝗵 𝘁𝗵𝗲 𝗖𝗼𝗺𝗺𝗼𝗻𝘄𝗲𝗮𝗹𝘁𝗵 𝗼𝗳 𝗟𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 (𝗖𝗢𝗟) 𝗶𝗻 𝗩𝗮𝗻𝗰𝗼𝘂𝘃𝗲𝗿, 𝗖𝗮𝗻𝗮𝗱𝗮. 🔥


A world recognized qualification - To be a shining management professional.


If you are obtain to learn CEMBA/ CEMPA register now!!  


➡ Application calling period : 14/05/2023 – 20/06/2023

➡ Apply online by visiting our web page: https://reginfo.ou.ac.lk/applyonline/


For more information: 

🌐 https://ou.ac.lk/cembacempa/

💻 https://ou.ac.lk/

☎️ 011 288 1008

📞 071 860 7498


#ousl #study #education #unique #CEMBA #CEMPA #masters #study #StudyInSriLanka #opportunity

Wednesday, May 10, 2023

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:

 நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:




1,குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் சாப்பிடுவதை தடுத்தார்கள் காரணம் அது வறுமை ஏற்படுத்தும்.


2, பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும் மனிதர்கள் நிழலுக்காக ஒதுங்குகிற மரத்துக்குக் கீழும் சிறுநீர் இருப்பதை தடுத்தார்கள்.


3, இடது கரத்தால் சாப்பிடுவதையும் குத்தவைத்து உட்கார்ந்து சாப்பிடுவதையும் தடுத்தார்கள்.


4, பெண்கள் ஜனாசாவைத் பின் தொடர்வதை தடுத்தார்கள்.


5, உயிரினங்களை நெருப்பால் கரிப்பதை தடுத்தார்கள்.


6, பிறர் மார்க்கத்தை திட்டுவதை தடுத்தார்கள்.


7, வீட்டில் குப்பை இருக்குமிடத்தில் தங்குவதை தடுத்தார்கள் ஏனென்றால் அது ஷைத்தான் தங்குமிடமாகும்.


8, கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியேறுவதை தடுத்தார்கள் காரணம் அனுமதி இன்றி வெளியேறும் பெண்ணை வானத்தில் உள்ள மலக்குமார்கள் சபித்துக் கொண்டே இருப்பார்கள் தீய ஜின்களும் மனிதர்களும் அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள் எதுவரைக்கும் என்றால் அவர் வீடு வந்து சேரும் வரைக்கும்.


9, ஒரு பெண் தன் கணவர் அல்லாத பிறருக்காக அலங்கரிப்பதை தடுத்தார்கள்.


10, புறம் பேசுவதையும் அதைக் கேட்டு மகிழ்வது தடுத்தார்கள்.


11, வெள்ளி தங்கத்திலான பாத்திரத்தில் நீர் அருந்துவதை தடுத்தார்கள்.


12, மதுவையும் மதுவை செய்பவர்களையும் அதை குடிப்பவர்களையும் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் அதில் கிடைக்கும் லாபத்தில் உண்ணுபவர்களையும் இறைவன் சபிக்கிறான்.


13, வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அதற்கு சாட்சியாக இருப்பதையும் அதை எழுதுவதையும் தடுத்தார்கள். இறைவன் குர்ஆனில் கூறுகிறான் வட்டி வாங்குபவர்கள் உண்ணுபவர்கள் அதற்கு சாட்சியாக இருப்பவர்களையும் அதை எழுதுபவர்களை இறைவன் சபிக்கிறான்.


14, உயிரினங்களின் முகத்தில் அடிப்பதைத் தடுத்தார்கள்.


15, ஒரு மனிதர் பிற மனிதரின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.


16, ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.


17, உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள். சஜ்தா செய்யக்கூடிய இடத்தை ஊதுவதையும் தடுத்தார்கள்.


18, மிருகங்கள் கட்டி போடப்படும் தொழுவத்தில் தொழுவதை தடுத்தார்கள்.


19, தேனீக்களை கொல்வதை தடுத்தார்கள்.


20, அல்லாஹ் அல்லாதவர்களை கொண்டு சத்தியம் செய்வதை தடுத்தார்கள்.


21, வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி குத்பா ஓதுகின்ற போது பேசுவதை தடுத்தார்கள்.


22, சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் தொழுவதை தடுத்தார்கள்.


23, நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அய்யாமுத் தஷ்ரீக் இந்த நாட்களில் நோன்பு வைப்பதை தடுத்தார்கள்.


24, மிருகங்கள் நீர் குடிப்பது போன்று ஒரேயடியாக மூச்சு விடாமல் குடிப்பதை தடுத்தார்கள்.


25, மக்கள் பயன் பாட்டில் உள்ள கிணற்றில் உமிழ்வதை தடுத்தார்கள்.


அல்லாஹ்வும் ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக!!!ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்!





Tuesday, May 9, 2023

𝐏𝐥𝐚𝐧𝐭 𝐁𝐫𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐪𝐮𝐞𝐬 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 in 𝑶𝑼𝑺𝑳

 📌𝑬𝒎𝒑𝒐𝒘𝒆𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒆𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒉𝒆𝒓𝒆 𝒂𝒕 𝑻𝑯𝑬 𝑶𝑼𝑺𝑳!!📌





The Department of Botany is offering the 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐢𝐧 𝐏𝐥𝐚𝐧𝐭 𝐁𝐫𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐪𝐮𝐞𝐬 those who wish to fulfill career dreams.


𝙀𝙣𝙧𝙤𝙡𝙢𝙚𝙣𝙩 𝙤𝙛 11𝙩𝙝 𝘽𝙖𝙩𝙘𝙝‍🍀 🌼 🌳


🟢Course Fee: 17,500/=

🟢Issuing of Applications: 21st February 2023

🟢Closing Date: 31st October 2023

🟢Commencing Date: 3rd December 2023

🟢Contact email: srwee@ou.ac.lk


#PlantBreeding #Botany #OUSLPlant #UniversityBotany #ShortCourse #Techniques




ENGLISH DIPLOMA COURSE

ENGLISH DIPLOMA COURSE


இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


Diploma in Professional English 2023 – University of Jaffna


▪️Duration: 1 Year(Weekends) 

▪️Course Fee 43000/-



(Closing Date: 2023.06.10)






𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐖𝐞𝐛 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞

 🔺 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 🔺

🔵 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐖𝐞𝐛 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭




" 𝐷𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑖𝑛𝑔 𝑎 𝑓𝑢𝑙𝑙𝑦 𝑑𝑦𝑛𝑎𝑚𝑖𝑐 𝑤𝑒𝑏𝑠𝑖𝑡𝑒 𝑖𝑠 𝑎 𝑐𝑜𝑚𝑝𝑙𝑒𝑥 𝑎𝑛𝑑 𝑡𝑖𝑚𝑒 𝑡𝑎𝑘𝑖𝑛𝑔 𝑝𝑟𝑜𝑐𝑒𝑠𝑠. 𝐼𝑡 𝑟𝑒𝑞𝑢𝑖𝑟𝑒𝑠 𝑑𝑒𝑒𝑝 𝑘𝑛𝑜𝑤𝑙𝑒𝑑𝑔𝑒 𝑎𝑛𝑑 𝑒𝑥𝑝𝑒𝑟𝑖𝑒𝑛𝑐𝑒 𝑖𝑛 𝐻𝑇𝑀𝐿, 𝐶𝑆𝑆, 𝐶𝑙𝑖𝑒𝑛𝑡/𝑠𝑒𝑟𝑣𝑒𝑟 𝑠𝑖𝑑𝑒 𝑠𝑐𝑟𝑖𝑝𝑡𝑖𝑛𝑔 𝑙𝑎𝑛𝑔𝑢𝑎𝑔𝑒, 𝐷𝑎𝑡𝑎𝑏𝑎𝑠𝑒 𝑀𝑎𝑛𝑎𝑔𝑒𝑚𝑒𝑛𝑡, 𝑒𝑡𝑐. 𝐼𝑛 𝑎𝑑𝑑𝑖𝑡𝑖𝑜𝑛 𝑡𝑜 𝑡𝑖𝑚𝑒 𝑎𝑛𝑑 𝑐𝑜𝑠𝑡. 𝐵𝑢𝑡, 𝑛𝑜𝑤 𝑐𝑙𝑖𝑒𝑛𝑡𝑠 & 𝑐𝑜𝑚𝑝𝑎𝑛𝑖𝑒𝑠 𝑤𝑎𝑛𝑡 𝑟𝑎𝑝𝑖𝑑 𝑑𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑚𝑒𝑛𝑡 𝑡𝑜 𝑟𝑒𝑑𝑢𝑐𝑒 𝑚𝑎𝑛 𝑡𝑖𝑚𝑒 𝑎𝑛𝑑 𝑐𝑜𝑠𝑡. 𝑆𝑜 ℎ𝑜𝑤 𝑖𝑠 𝑖𝑡 𝑝𝑜𝑠𝑠𝑖𝑏𝑙𝑒? 𝑂𝑝𝑒𝑛 𝑆𝑜𝑢𝑟𝑐𝑒 𝐶𝑀𝑆 𝑖𝑠 𝑡ℎ𝑒𝑟𝑒 𝑡𝑜 𝑠𝑜𝑙𝑣𝑒 𝑡ℎ𝑖𝑠. 𝐽𝑜𝑜𝑚𝑙𝑎 𝑎𝑛𝑑 𝑤𝑜𝑟𝑑𝑝𝑟𝑒𝑠𝑠 𝑤ℎ𝑖𝑐ℎ 𝑎𝑟𝑒 𝑡ℎ𝑒 𝑚𝑜𝑠𝑡 𝑝𝑜𝑝𝑢𝑙𝑎𝑟 𝑃𝐻𝑃 𝐶𝑀𝑆 𝑡𝑜𝑑𝑎𝑦, 𝑝𝑟𝑜𝑣𝑖𝑑𝑒 𝑔𝑟𝑒𝑎𝑡 𝑚𝑎𝑛𝑎𝑔𝑒𝑚𝑒𝑛𝑡 𝑜𝑓 𝑤𝑒𝑏𝑠𝑖𝑡𝑒 𝑤𝑖𝑡ℎ 𝑙𝑒𝑠𝑠 𝑒𝑓𝑓𝑜𝑟𝑡. 𝑈𝑠𝑖𝑛𝑔 𝐶𝑀𝑆 (𝐶𝑜𝑛𝑡𝑒𝑛𝑡 𝑀𝑎𝑛𝑎𝑔𝑒𝑚𝑒𝑛𝑡 𝑆𝑦𝑠𝑡𝑒𝑚) 𝑜𝑛𝑒 𝑐𝑎𝑛 𝑚𝑎𝑛𝑎𝑔𝑒 𝑤ℎ𝑜𝑙𝑒 𝑤𝑒𝑏𝑠𝑖𝑡𝑒 𝑡ℎ𝑟𝑜𝑢𝑔ℎ 𝑎𝑑𝑚𝑖𝑛𝑖𝑠𝑡𝑟𝑎𝑡𝑜𝑟 𝑝𝑎𝑛𝑒𝑙."


➡️ For More Details: 

Link: https://ou.ac.lk/nsc/programme/short-course-in-professional-web-development-using-joomla-and-wordpress/

Monday, May 8, 2023

IPL 2023: KKR vs PBKS | ரஸ்ஸல் அதிரடியால் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா

 IPL 2023: KKR vs PBKS | ரஸ்ஸல் அதிரடியால் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா




கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டோஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய கேப்டன் ஷிகர் தவான் சிந்தித்து ஆடி ரன்களை குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, மற்றவர்களால் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை.

அந்த அணியின் முக்கிய வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 12, லியாம் லிவிங்ஸ்டோன் 15 , ஜிதேஷ் சர்மா 21, ஷாருக் கான் 21, ஹர்பிரீத் பிரார் 17, ரிஷி தவான் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், ஹரிஷ் ராணா 2 விக்கெட் வீழ்த்தினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. கேப்டன் நிதிஷ் ராணா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்தார். ஜேசன் ராய் 38 ரன்கள், . ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும், இறுதிக்கட்டத்தில் ரஸ்ஸல் 42 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் அணிக்காக குவித்தார்கள் , 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. கடைசி பந்துக்கு முன்னதாக ரஸ்ஸல் அவுட் ஆக, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் கடைசி பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.






IPL Matheesha Pathirana In Tamil || ஐபில் மதீஷா பத்திரனா

 IPL Matheesha Pathirana In Tamil || ஐபில் மதீஷா பத்திரனா




• பிறப்பு:- 2022 டிசம்பர் 18

• பிறந்த இடம்:- Kandy

• பங்கு:- Bowler

• பேட்டிங் ஸ்டைல்:- Right Handed

• பந்துவீச்சு ஸ்டைல்:- Right Arm Medium Seam

• இவர் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார்

• மலிங்காவின் பந்துவீச்சு மாதிரி அமைப்பில் வீசுவதால் இவரை குட்டி மலிங்க என்று எல்லோரும் அழைப்பார்கள்

• இவர் தற்போது IPLல் Chennai Super King அணியில் இடம் பிடித்துள்ளார்.





மேலும்…

ஐபிஎல் 2023 இன் 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. போட்டிக்கு பிந்தைய பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, மும்பைக்கு எதிரான வெற்றி குறித்து பேசினார்.

இதன் பொது மதீஷ பத்திரனா வின் பவுலிங் ஆக்சனை புகழ்ந்து அதேவேளையில், அதில் உள்ள சிரமங்களை சுட்டிக்கட்டினார், அவர் சின்னப் பையன் என்பதை மறந்து விடக்கூடாது மேலும் அவர் எவ்வளவு

கிரிக்கெட் விளையாடுகிறார் என்று கவனிப்பது மிகவும் முக்கியம் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி வலியுறுத்துகிறார்!

அவர் ஏன் டெஸ்ட் விளையாடக் கூடாது? மேலும் ஏன் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐசிசி போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்கு, அவர் தன்னை அதிக மாற்றிக் கொள்ளக் கூடியவர் இல்லை, அவர் எப்பொழுது வந்தாலும் ஒன்றையேதான் செய்யப் போகிறார். அதனால் அவரை தேவைக்குப் பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர் இலங்கை அணியின் சொத்து என்கிறார்!

குறிப்பு :- இவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Join us Whatsapp:-

https://chat.whatsapp.com/LKHNANfeECP3PLk0PPYMpI

 








Sunday, May 7, 2023

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) அவர்கள் அந் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய முடிசூடிக் கொண்டார்.

 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார் பின் அவருக்கு 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார்.


இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் அவர்கள் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலிருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மன்னரான மூன்றாம் சார்லஸ் அவசியம் கடைபிடிக்க வேண்டிய அரசக் குடும்ப விதிமுறைகள் விவரம் பின்வருமாறு ...


பரிசுகளை மறுக்கக் கூடாது:

பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி மன்னர் பரிசு பொருட்களை தட்டிகழிக்க கூடாது.

மகனுடன் பயணம் கூடாது:

மன்னரான மூன்றாம் சார்லஸ் இளவரசர் உடன் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணிக்கக் கூடாது. தனித் தனி விமானத்தில்தான் பயணிக்க வேண்டும்.

ஆடை விதிமுறைகள்:

அரசர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சில ஆடை விதிகளையும் பின்பற்ற வேண்டும். விதிகளின்படி,அவர்கள் பயணம் செய்யும் நாட்டின் உள்ளூர் பாரம்பரியத்தை அவர்களின் ஆடை பிரதிபலிக்க வேண்டும்.


செல்பி கூடாது:

மன்னர் பொது மக்களுடன் செல்பி படங்கள் எடுக்கக் கூடாது. ஆட்டோகிராஃப் (கையெப்பம்) வழங்கக் கூடாது.


மட்டி மீன்கள் உண்ணக் கூடாது:

மன்னர் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த  அந்நியர்களிடமிருந்து உணவையும் ஏற்றுக் கொள்ள முடியாது உணவு நச்சுத் தன்மையைத் தவிர்ப்பதற்க்கு மட்டி மீன்களை அரசர் உட்கொள்ளக் கூடாது.




Higher National Diploma (HND) in Nursing Course

 Nursing Training (Free Course) - Lanka Hospitals, School of Nursing







Higher National Diploma (HND) in Nursing 


• Duration: 03 Years

• Medium: English


Application & Details: https://tamilguru.lk/nursing-training-course-2023-lanka-hospitals/


Closing Date: 2023.05.28

Friday, May 5, 2023

பண்ணவ மாணவிக்கு பிரித்தானிய மாளிகையிலிருந்து ஒரு கடிதம்

 


பண்ணவ மாணவி ஒருவருக்கு பிரித்தானிய பக்கின்ஹம் மாளிகையிலிருந்து ஒரு மடல்!




பண்ணவையை சேர்ந்த செல்வி பசீனா பாஹிம் என்கின்ற மாணவிக்கு பிரித்தானிய பக்கின்ஹம் மாளிகையிலிருந்து இளவரசர் சார்ல்ஸ் இடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது!

மேற்படி மாணவி இரண்டாம் எலிசபத் மகாராணியின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார், அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே மேற்படி கடிதம் இளவரசர் சார்ல்ஸ் இன் கையொப்பத்துடன் குறித்த மாணவிக்கு அனுப்பப் பட்டிருக்கின்றது, ஏற்கனவே குறித்த மாணவி தரம் ஆறில் கற்றுக்கொண்டிருக்கும் போதும் பக்கின்ஹம் மாளிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.









ஆரம்பக்கல்வியை பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கற்ற பசீனா பாஹிம் தற்போது வெல்பொத்துவெவ அல் இல்மியா கல்லூரியில் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்

பக்கின்ஹம் மாளிகையை தனது வாழ்வில் என்றாவது ஒரு நாள் தரிசிக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்துடன் இருக்கும் குறித்த மாணவிக்கு இன் ஷா அல்லாஹ் அவரது இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!


Thursday, May 4, 2023

மதீனாவில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்


ரமலான் பண்டிகை கொண்டாட்டம்












தேசிய மட்டத்திலான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் இன்றைய தினம் 2023/05/04 மதீனா தேசிய பாடசாலையில் (Giriulla Zonal Office)  கல்லூரியின் அதிபர் S.M. ஹைதர் அலி (SLEAS) அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.




















கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.




மேலும் இந்நிகழ்வின்

 பிரதம அதிதியாக

அழகியல் கல்வி, மார்க்க மற்றும் விழுமிய கல்விக்கான கல்விப் பணிப்பாளர் கலாநிதி நிஷாத் ஹந்துன்பதிரன அவர்களும்,

 

கௌரவ அதிதியாக

 முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி கிளையின் கல்விப் பணிப்பாளர் மேஜர். N.T. நஸிமுதீன் அவர்களும்,

 

விஷேட அதிதிகளாக

 கல்வி அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் M.R.M. இர்ஷான், கல்வி அமைச்சின் உதவி கல்விப் பணிப்பாளர் M.I.M. நவ்பர்தீன் மற்றும் கிரியுள்ள கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் S.L.M. பாயிஸ் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

























மேலும்

அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேசத்தின் பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.