Diploma in Science In Laboratory Technology 2023/2024 Course.
Sunday, April 30, 2023
Diploma in Science In Laboratory Technology 2023/2024 Course.
Saturday, April 29, 2023
Safe Bike Raiding || கவனமாக பைக் ஓடு
அன்புள்ள பைக் ஓடும் தம்பிக்கு,
இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நீ உயிரோடு இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இல்லை என்றால் சில வேளைகளில் வைத்தியசாலை கட்டிலில் கூட படுத்து கொண்டிருக்கிலாம்.
பைக் ஓடுவது ஒன்றும் சாகசம் கிடையாது. நீயாக ஒன்றும் செய்ய தேவையில்லை. முறுக்க முறுக்க அதுவாக ஓடும். முன்னே வருவது மாடா ஆடா, காரா பைக்கா, ஆளடிச்சானா, இல்லை மனிதனா என்பது கூட உன் பைக்குக்கு தெரியாது. சில வேளை இஸ்ராயிலாகவோ, எமனாகவோ கூட இருக்கலாம். யாருக்கு தெரியும். அது போல தன் மேல் ஏறி இருப்பதும் எருமையா இல்லை கட்டிளம் பையனா என்பது கூட அதற்கு தெரியாது. பைக் டிசைன் அப்படி.
நீ வேகமாக ஓட்டுவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் உனக்கு எடுக்கலாம். ஆனால், அதற்கு முதலே, சில வேளை ஒரு ஆக்சிடன்ட் உன் உயிரை பறித்து விடலாம் அல்லது நிரந்தர நோயாளியாக மாற்றி விடலாம். இறைவன் உன்னை காப்பானாக. சில வேளை மயிரிழையில் உயிர் தப்புதல் உனக்கு ஒரு பாடமாக அமையலாம்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது சில வேளைகளில் உனக்கு தெரியாமல் இருக்கலாம். நீ வேகமாக ஓட்டும் ஒவ்வொரு நொடியும் யாரோ ஒருவர் உன்னை சபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
உனக்கு முன்னே குழந்தையோடு வரும் ஒரு தாய், வீதியை கடக்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடசாலை மாணவன், ஓரமாக தன் பாட்டிற்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர், இப்படி யாரோ ஒருவர் உனது வேகத்தை கண்டு அஞ்சி "இவன்ட மவ்த்து அக்சிடன்ல தான்" என்று திட்டிக் கொண்டிருப்பது உனக்கு தெரியுமா?
உனது வேகத்தை கண்டு பயந்து போய், காய் கறி வாங்க மார்க்கட் கூட போக முடியாமல் எத்தனையோ பெரியவர்கள் வீட்டிலே இருந்து உன்னை நினைத்து புழுங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியுமா?
இவை எல்லாவற்றையும் விட, ஒரு நாள் நீ எக்சிடன்ட் பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது, உனது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் படும் பாடும் கஷ்டமும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் நீ அப்போது ஐஸியுலே உயிருக்காக போராடிக் கொண்டிருப்பாய். உன்னை காப்பாற்றுவதற்காக வேண்டி, ஒரு வருடமாக ஒபரேசனுக்கு காத்திருக்கும் ஒருவருக்கு நாளை காலை வழங்கப்பட வைத்திருந்த இரத்தத்தை எடுத்து பாவிக்கப்பட வேண்டி வரும். அப்போது இரத்தம் இல்லாமல் கஷ்டப்படும் அந்த நோயாளியின் மனக் குமுறலை நீ அறிய மாட்டாய். சில வேளைகளில், நீ உயிர் பிழைத்தாலும் அந்த சாபம் உன்னை சும்மா விடாது.
அக்சிடனால் உனது தலைக்குள்ளே ஏற்பட்ட இரத்தக் கசிவை சரி செய்ய உன்னை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் பயன்பட்டதால் , அப்போது தான் ஹாட் அட்டக் வந்த உனது ஊர் பாடசாலை அதிபரை சிகிச்சைகளுக்காக கொண்டு செல்ல அம்புலன்ஸ் இல்லாமல் அவர் இறந்த போன பாவம் உன்னை வந்தடைந்து கொண்டிருப்பது கூட உனக்கு தெரிய வாய்ப்பில்லை.
"எனது மகனின் மூளையில் உள்ள கட்டியை இன்று வெட்டி எடுத்துவிடுவார்கள், இரண்டு வருடங்களாக நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அதனோடு சரியாகிவிடும்" என்று சந்தோஷத்துடன் இருக்கும் தாய், 'அவசரமாக ஒரு அக்ஷிடன் கேஸ் உங்க புள்ளட ஒப்பரேஷன நாளைக்கு தான் செய்யலாம்' எனும் போது என்ன பாடு படும் என்பது உனக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் உனக்கு சபிப்பதை தவிர வேறு எதுவும் உனக்காக செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது?
இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் எழுதி உனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவை எல்லாமே உனக்கு சாபத்தையும் பாவத்தையும் கொண்டுவந்து சேர்ப்பனவாகவே இருக்கின்றன. இவைகள் தெரியாமல் தான் முறுக்கு, முறுக்கு என்று முறுக்கி கொண்டு நீ ஓடுகிறாய். கொஞ்சம் நிதானித்து நின்று பார். நீ அப்படி ஓடி ஓடி என்ன சாதித்திருக்கிறாய் என்று கொஞ்சம் நிதானமாக யோசித்து பார். ஒன்றுமேயில்லை.
ஆனால், இப்படி உன்னைப் போலவே வேகமாக ஓடி, கால் கை உடைந்தவர்கள், இடுப்புக்கு கீழே வேலை செய்யாமல் போனவர்கள், கட்டிலோடு கிடந்து மலம் சலம் கழிப்பவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள் என்று சாதித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
உனது ஊரிலேயே உனது வீட்டிற்கு பக்கத்திலேயே அப்படி ஒருவர் நிச்சயமாக இருப்பார். இனி பைக்கை தொடுவதற்கு முதல், கொஞ்சம், அவர்களில் ஒருவரை, நீ கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். அவர்கள் படும் கடும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உன் முறுக்கேறிய உடலுக்கு கஷ்டம் எது என்று தெரிய வரும்.
அடுத்த முறை பைக்கிலே ஏறி உட்காரும் போது இந்த பதிவை மனதில் நினைத்துக் கொள். கொஞ்சம் மெதுவாக ஓடிப் பார். உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது, மக்கள் உன்னோடு எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்பது, உனக்கு அப்போது தான் தெரிய வரும்.
நன்றி
Friday, April 28, 2023
சிறுவர்களுக்கான மரபுத்தொடர்கள்
சிறுவர்களுக்கான மரபுத்தொடர்கள்
கால் பற்றிய மரபுத்தொடர்
- கால் கிளர்தல் - ஓடுதல்
- கால் சாய்தல் - அடியோடு அழிதல்
- கால் தாழ்தல் - தாமதித்தல்
- கால்பிடித்தல் - கெஞ்சுதல்
- காலாடுதல் - முற்சியால் செல்வஞ் செழித்தல்
கழுத்து பற்றிய மரபுத்தொடர்
- கழுத்தறுத்தல் - தீமை செய்தல்
- கழுத்து முறிதல் - வருந்துதல்
- கழுத்திற் கட்டுதல் - வலிந்து பொறுப்பாளியாக்குதல்
- கழுத்துக் கொடுத்தல் - பிறர் காரியத்தை ஏற்றல்
- தைக்கட்டுதல் - விடாது. விடாது நெருக்குதல்
கண் பற்றிய மரபுத் தொடர்
- கண்ணிற்றல் - எதிர் நிற்றல்
- கண் திறத்தல் - அறிவுண்டாதல்
- கண்ணெறிதல் - கடைக்கண்ணாற் பார்த்தல்
- கண்ணோடுதல் - இரங்குதல்
- கண் மலர்தல் - விழித்தல்
- கண்கலத்தல் - எதிர்படுதல்
- கண்காட்டிவிடல் - கண்சாடையால் ஏவிவிடல்
- கண் சாத்துதல் - அன்போடுபார்த்தல்
- கண் சாய்தல் - அறிவு தளர்தல்
அடி பற்றிய மரபுத்தொடர்
- அடி கோலுதல் - அத்திவாரமிடல்
- அடிப்படுத்துதல் - கீழ்ப்படுத்துதல்
- அடிப்பார்த்தல் - நிழலளர்ந்து பொழுதறிதல்
- அடியொற்றுதல் - பின்பற்றல்
- அடி சாய்தல் - நிழல் சாய்தல்
- அடியுறை - பாத காணிக்கை
- அடி நகர்தல் - இடம் விட்டுப் பெயர்தல்
- அடிப்படுதல் - பழமையாக வருதல்
- அடி திரும்புதல் - பொழுது சாய்தல்
- அடியொற்றுதல் - பின்பற்றுதல்
முகம் பற்றிய மரபுத்தொடர்
- முகங்காட்டுதல் - காட்சி கொடுத்தல்
- முகமாதல் - உடன்படுதல்
- முகமறிதல் - மனம்நோதல்
- முகங்கோணல் - வெறுப்புக்குறி
- முகத்தில் கரி பூசல் - அவமதித்தல்
மாமியார் வீட்டில் மருமகள் சமையல்
மாமியார் வீட்டில் மருமகள் சமையல்
பெண்களின் வாழ்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றுதான் அவர்கள் திருமணமாகி பிறந்த வீட்டிலிருந்து சென்று புகுந்த வீட்டில் இருந்த அந்த முதல் வாரம்!..
பிறந்த வீட்டில் இளவரசியாக வாழ்ந்தவர்கள், சமையலறை பக்கம் கூட தலை வச்சு பார்த்திடாதவர்கள்!...
கீழே காட்டப்படும் படங்களை பார்க்கும் போது உங்களுக்கும் இவ்வாறு நடந்து இருக்கலாம்.😄😄 இதைப் பார்க்கும்போது பழைய நினைவுகள் உங்கள் ஆழ்மனதில் தோன்றி சிரிப்பு சிரிப்பாக வரும்!..
பிறந்த வீட்டில் அம்மா சமைக்கும் போது உங்களை எவ்வளவு பேசினாலும் காதில் கூட வாங்காமல், அம்மாவின் பேச்சை கேட்காமல் TV, Phone, தூக்கம், சோம்பேறித்தனம் போன்ற விடயங்களால் இன்று பெண்களுக்கு சமைக்க கூட தெரியாத நிலை காணப்படுகின்றது!... 😔😔😔
எப்படியோ திருமண வயதை அடைந்து திருமணமும் நடைபெற்றது... பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு மருமகளை கூட்டிக் கொண்டு வந்ததன் பின் மறுநாள் காலை மருமகள் எழுந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் காபி போட்டு கொடுத்துவிட்டு சந்தோசமாக இருந்தார். காலையில் மாமியார் சமைத்ததன் காரணத்தால் மத்தியானம் மருமகளே சமைக்க முடிவெடுத்தாள்🤔🤔🤔
பகல் சாப்பாட்டை விறு விறு என மருமகள் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருந்தாள்.
ஐயோ பாவம்!! மருமகள் கஷ்டப்பட்டு சமைக்கிறாள் அழகான முறையில் சமைத்து இருப்பாள் என்று மாமியார் சமையலறையை எட்டிப் பார்க்கச் சென்றார்!!!
எப்புட்றா!..
நன்றி!..
Msm imthihas
Fb:- #journal Mind
𝑪𝒂𝒍𝒍𝒊𝒏𝒈 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 - 𝐅𝐨𝐫 𝐄𝐒𝐁𝐌 !! OUSL
🔥 𝗔 𝗠𝗼𝘀𝘁 𝗔𝘄𝗮𝗶𝘁𝗲𝗱 𝗰𝗼𝘂𝗿𝘀𝗲 🔥
📌 𝑪𝒂𝒍𝒍𝒊𝒏𝒈 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 - 𝐅𝐨𝐫 𝐄𝐒𝐁𝐌 !! 📌
𝑬𝒎𝒑𝒐𝒘𝒆𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒊𝒈𝒉𝒆𝒓 𝒆𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒉𝒆𝒓𝒆 𝒂𝒕 𝑻𝑯𝑬 𝑶𝑼𝑺𝑳!!
Faculty of Management Studies offers the 𝗔𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲 𝗶𝗻 𝗘𝗻𝘁𝗿𝗲𝗽𝗿𝗲𝗻𝗲𝘂𝗿𝘀𝗵𝗶𝗽 𝗮𝗻𝗱 𝗦𝗺𝗮𝗹𝗹 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 (𝗘𝗦𝗕𝗠) for those who wish to fulfill their professional career dreams.
“The Open University of Sri Lanka presents this programme to address these two crucial factors of business success, selection, and management of small business ventures. The structure of the programme and the approach to it are designed to ensure its usefulness as a training exercise for aspiring investors and businessmen and for those who aspire to become managers and other supportive staff in business organizations.”
Application issuing period: 2nd May 2023 – 15th June 2023
Duration – 1 years
𝗙𝗼𝗿 𝗺𝗼𝗿𝗲 𝗱𝗲𝘁𝗮𝗶𝗹𝘀:
☎: 0112 881 024 / 0112 881 255
📞 : 0716 393 714
🌐: https://ou.ac.lk/advesbm/
#ESBM #AdvCertificate #entrepreneur #ouslESBM #OpenUniversityESBM #Management #SmallBussines #Beginners
Thursday, April 27, 2023
இலங்கையில் B.Ed & PGDE கற்கைநெறிகள் ||
2023 July Intake - Apply Now!
🧑🏻🎓👨🏻🎓B.Ed & PGDE👨🏻🎓🧑🏻🎓
கல்விமானி (B.Ed) அல்லது பட்டப்பின் டிப்ளோம் (PGD) யை குறைந்த கட்டணத்தில் தொடர்வதற்கான அரிய சந்தர்ப்பம்!
உங்கள் கனவுகளை இருக்கும் இடத்தில் இருந்தே அடைந்து கொள்ள முடியும்.
Study From Anywhere! AnyTime😍
✍🏻Our Uniqueness:
✅University Gtants Commission (UGC) Recognized Program
✅Experienced Lecturers
✅Easy Monthly Payment Plan
மேலதிக தகவல்களுக்கு:
+9478 929 9199 / +9476 984 1737
🟣பதிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
Closing Date:2023.06.30
பாடநெறியை தொடர அல்லது விபரங்களுக்கு:
உங்களது முழுப்பெயர், முகவரி, NIC இலக்கம், தொடர விரும்பும் பாடநெறி என்பவற்றை குறிப்பிட்டு வட்சப் மெசேஜ் ஒன்றை அனுப்பவும்.
WhatsApp: +9478 929 9199
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
Wednesday, April 26, 2023
சந்தோஷம் எப்படி கிடைக்கும்???
சந்தோஷம் எப்படி கிடைக்கும்???
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
எது அமைதியுடையதோ, அதுவே செல்வம். எதை அனுபவிக்கும் போது குற்றமற்ற ஒரு மனநிலையில் இருக்கிறோமோ, அதுவே உயர்வு.
நீங்கள் ஒரு சந்தோஷமான நபர் என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், எது உங்களைச் சந்தோஷப்படுத்துகிறது? உங்கள் குடும்பமா, வேலையா, மத நம்பிக்கையா? உங்கள் பேங்க் பேலன்ஸா?
குறிப்பிட்ட ஒரு லட்சியத்தை அடையும்போது அல்லது ஆசைப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது நிறைய பேருடைய மனதில் சந்தோஷ அலைகள் பொங்கியெழுகின்றன. ஆனால், அந்தச் சந்தோஷ அலைகள் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கின்றன? பெரும்பாலும், கொஞ்ச நேரத்துக்குத்தான்!
அப்ப சந்தோஷப் பாதையில் நிரந்தரமாக செல்ல என்னென்ன நெறிமுறைகள் நமக்கு உதவும்?
மனத்திருப்தியும், தாராள குணமும், உடல் ஆரோக்கியமும், மன உறுதியும், அன்பு, மன்னிப்பு, வாழ்க்கையில் ஒரு நோக்கம், நம்பிக்கை இவைகள் வேண்டும்.
சந்தோஷம் என்பது ‘நல்லபடியாக வாழ்கிறோம்... இப்படியே கடைசிவரை வாழ்வோம்’ என்ற மனநிலை, மனத்திருப்தியோடு இருப்பது.
ஆகவே, சந்தோஷம் என்பது ஒரு தொடர் பயணம், அதற்கு ஒரு முடிவே இல்லை. ஆனந்தமாக வாழலாம்.
பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.
நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களைச் சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
வாழ்க்கையில் வெற்றிகள் அதிகரிக்க!! || How to Increase success in life!!
வாழ்க்கையில் வெற்றிகள் அதிகரிக்க!! || How to Increase success in life!!
நீங்கள் இப்போது உள்ள நிலைமையில் இருந்து உங்களை 10 மடங்கு அல்லது 15 மடங்கு பொருளாதார அளவில் உயர்த்திக் கொண்டு உங்கள் மனதில் அந்த விஷயங்களை சிந்திக்க அனுமதியுங்கள்.
உதாரணமாக பெரும்பணம், செல்வச்செழிப்பு, ஆடம்பரமான கார், வசதியான வீடு, குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள அருமையான மனைவி, எப்போதும் நல்லுறவை தரக்கூடிய நண்பர்கள், ஆரோக்கியமான உடல், மற்றவர்கள் நம்மை உயர்ந்த மரியாதையுடனும் மதிப்புடனும் பார்த்தல், என்று இவை அனைத்தும் உங்களது வாழ்வில் நடக்க வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சின்ன விஷயங்களை யோசித்தாலும் நடக்கும், பெரிய விஷயங்கள் யோசித்தாலும் அது நடக்கும்.
சின்ன விஷயங்களை குறிக்கோளாக நிர்ணயித்து நடந்திட எவ்வளவு காலம் ஆகுமோ அதே நேரம் தான் பெரிய கனவை அடைவதற்கும் ஆகும்.
மனசு என்பது ஒரு விழை நிலத்தை போலவே ஏனென்றால் விலை உயர்ந்த முந்திரி, ஏலக்காய், மிளகு, இலவங்கம் சாகுபடி செய்ய எவ்வளவு உடலுழைப் பும், காலமும் தேவையோ அதே போல தான் அரிசி, பருப்பு, காய்கறிகளை விளைவிக்கவும், அறுவடை செய்யவும் நேரம் செலவாகும்.
அதனால் நீங்கள் ஒரு பிரம்மாண்டமான நோக்கத்தை உறுதி செய்து, அதற்காக உழைக்க ஆரம்பியுங்கள்.
இவை அனைத்தும் நீங்கள் எப்படி கனவு காண்கிறீர்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதாவது ஒரு பைசா கூட இல்லை, அனைத்து விஷயங்களிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் சரி உங்கள் குறிக்கோளை நிர்ணயிப்பது முக்கியம்.
"ஏனெனில் உங்கள் கனவுகளை நிர்ணயித்தால் நீங்கள் உங்கள் வெற்றியை பாதி அடைந்ததற்கு சமம்".
நிறைய மக்கள் மிக வறுமையான நிலையில் இருந்து பெரும் பணக்காரர்களாக மாறி இருப்பதை நீங்கள் கேட்டு இருக்கலாம்.
இது எவ்வாறு நடந்தது, இதை எப்படி தெரிந்து கொள்வது!! 🤔🤔
அதாவது அதை நீங்கள் தெரிந்துக் கொள்ள சிறிது நேரம் அமைதியாகவும், கவனமா கவும் இருந்து உங்களுடைய எல்லா நேரங்களிளும் நீங்கள் அடைய வேண்டும் என்று யோசித்த விஷயங்கள் என்னென்ன என்பதை எழுதிக் கொள்ளுங்கள், செயல்படுங்கள்.
1.நான் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்?
2. எந்த அளவு உங்களுடைய தொழிலை முன்னேற்ற வேண்டும்?
3. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?
இப்போது நீங்கள் எப்படிப்பட்ட பிரம்மாண்டமான கனவை அடைய வேண்டும் என்ற தெளிவான, துல்லியமான வரைபடம் உள்ளதோ அப்போது நீங்கள் நேர்மறை மனநிலை கொண்டவராக வலம் வர ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய கூர்மையான பார்வை, தெளிவான குறிக்கோள் மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
வெற்றி நிச்சயம்!!👍👍
Paragahakotuwa
MSM Imthihas
Tuesday, April 25, 2023
வயது கூடும் போது நோய்வருமா??
வயது கூடும் போது நோய்வருமா??🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
வயது கூடும் போது நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.
உங்களைப் படைத்தது இறைவன் என்று நீங்கள் நம்புங்கள்
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படவே படைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே எவனாவது, வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.
நம் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; முதுமையிலும் இளமை, நோய் என்று எதுவும் இல்லை, இயலாமை என்று எதுவுமில்லை, எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
எனவே சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
மரணம்: நம் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?. நம் பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளை அழைத்து, "நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன், சந்தோஷமாக வாழுங்கள்!" என்று நம் குடும்பத்தினரிடம் விடைபெற்று, மகிழ்ச்சியாக நம் உடலைத் துறக்க வேண்டும்.
யாருடைய மரணமும், மரணப் படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.
சிந்தனையை மாற்றுங்கள்: நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்! எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.
எங்களுக்கு என்று இருக்கும் ரிஸ்க் எப்போது முடியுமோ அப்போது மரணம் எம்மை தேடி வரும்...
Monday, April 24, 2023
முடிந்த பெருநாளும் - வெளிநாட்டு வாழ்க்கையும்
முடிந்த பெருநாளும் - வெளிநாட்டு வாழ்க்கையும்
🫒🫒🫒🫒🫒🫒📚🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒
அனைவருக்கும் ஈத் முபாரக்!..
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
கஷ்டம் எனத் தெரிந்ததும் குடும்பத்துக்காய் அனைத்தையும் செய்து விட்டு
ஓரமாய் தனது அறையில் சோகமாய் தூங்கும்
அநாதை வாழ்க்கைக்கு பெயர் தான்
வெளிநாட்டு வாழ்க்கை"
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
![]() |
இவர்கள் தன் தேவைகள் என்ன என்பதனை அறிந்தும் அவைகளை கூட பூர்த்தி செய்யாமல் குடும்பத்தின் தேவைகளுக்காக தம்மை அற்பணித்த தியாகிகள்!...
வாழ்க்கையில் நாலு சிவருக்குள் தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ளும் உத்தமர்கள், தியாகிகள் ஆண்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து தன்னுடைய குடும்ப கஷ்டத்துக்காக உழைக்கும் பெண்களும் தான் பாவம் இவர்கள் தங்களை மறந்து தம் குடும்பம் நல்லா இருக்கணும் என்றதுக்காகவே உழைத்து பாடுபடுகின்ற தியாகிகள்.
வெளிநாடுகளில் ஆதரவின்றி தவிக்கும் அநாதை போன்றவர்கள். அடுத்த மாதம் என் பிரச்சினைகள் தீர்ந்து விடும் அடுத்த வருடம் தாய்நாடு சென்று குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடலாம் என்று காலம் காலமாக தொலைபேசியிலே தன்னுடைய வாழ்க்கையை அற்பணிக்கும் தியாகிகள் அல்லவா இவர்கள்.
இவர்கள் சிலவு செய்ய தெரியாதவர்கள் அல்ல:- தாம் சிலவளிக்கும் சிலவை கூட மிச்சம் வைத்து குடும்பத்துக்காக அனுப்பி வைத்து
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
இவர்களுக்கு இது வாங்கினீங்களா??
அவங்களுக்கு அது வாங்கினீங்களா??
அவங்க பாவம்!
இவங்க பாவம்! எதுவும் வாங்கிக் கொடுங்க என்று சொல்லி அவர்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழனும் என்று
தன் சந்தோசத்தை மறைத்து வாழ்பவர்கள் இவர்கள்!..
அதிலும் வேலை தேடி தேடி தேய்ந்து போனவர்கள் நிலை!... ஐயோ பரிதாபம்...
நான் ஏமாந்து விட்டேன் என்று வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல், மனதை கள்ளாக்கிக் கொண்டு Facebook, whatsapp இல் இருந்ததில் நல்ல ஒரு dress ஐ போட்டுக் கொண்டு நானும் சந்தோசமாக இருக்கின்றேன், என்னை நினைத்து யாரும் சங்கடமடைய கூடாது என்று Stutas வைத்து நடிக்கும் தியாகிகள்!...
தாய் நாட்டில் இருக்கும் பொது பார்த்து பார்த்து சலித்து போன தோதல், பலகாரம்,கேக்,சீனிமா, பெருநாள் பிரியாணி இவை ஒரு வாய் கிடைக்காதா என்ற பெரிய ஏக்கத்தில் ஒரு வீடியோ call ஓடு முடிந்து விட்டது இந்த பெருநாள்...
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
மனைவி, பிள்ளைகள், உம்மா, வாப்பா, சகோதர்கள், சகோதரிகள், நண்பர்கள் அனைவருருடனும் வீடியோ call பேசி சந்தோசமானது இந்த கரடு முரடான உள்ளம். ஆல்ஹம்துலில்லாஹ்...
நாளைக்கு திரும்ப வேலைக்கு போகனமே... கொஞ்சம் தூங்கிக்குவோம்!... 😔😔😔😔😔😔
வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அனைவருக்கும் மீண்டும் ஈத் முபாரக் ஈகை திருநாள் பெருநாள் வாழ்த்துக்கள் ஈத் முபாரக்...
paragahakotuwa
தெரியாத உண்மைகள்
தெரியாத உண்மைகள்
🍎 உணவை கேட்கும் மொழி
"பசி"!
🔥 தண்ணீரை கேட்கும் மொழி
"தாகம்"!
🔥 ஓய்வை கேட்கும் மொழி
"சோர்வு தலைவலி"!
🔥 நுரையீரலை தூய்மை செய்யும் மொழி "தும்மல்,சளி,இருமல்"!
🔥 உச்சிமுதல் பாதம் வரை உள்ள
கழிவுகளை வெளியேற்றுகிறேன்
என்று சொல்லும் மொழி "காய்ச்சல்"!
🔥 காய்ச்சலின்போது உணவை உண்ணாதே என்று சொல்லும்
மொழி"வாய்க்கசப்பு மற்றும்
பசியின்மை"!
🔥 காய்ச்சலின் போது நான் உடலை
தூய்மை செய்கிறேன்,நீ எந்த
வேலையும் செய்யாதே என்று
சொல்லும் மொழி "உடல் அசதி"!
🔥 எனக்கு செரிமானம் ஆகாத பொருளை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "வாந்தி"!
🔥 நான் குடல்களிலுள்ள கழிவுகளை
வெளியேற்றுகிறேன் என்று
சொல்லும் மொழி "பேதி"!
🔥 இரத்தத்தில் உள்ள நச்சை நான்
தோல்வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "வியர்வை"!
🔥 நான் வெப்பநிலையை சீர்செய்து
இரத்தத்தில் உள்ள நச்சை
முறிக்கப் போகிறேன் என்று
சொல்லும் மொழி "உறக்கம்"!
🔥 நான் முறித்த நச்சை இதோ
வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி
"சிறுநீர் கழித்தல்"!
🔥 உணவில் உள்ள சத்தை பிரித்து
இரத்தத்தில் கலந்து,சக்கையை
வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி
"மலம் கழித்தல்"!
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
எனவே,நாம் அனைவரும் நம் உடலின் மொழி அறிந்து,நமக்கு
ஏதேனும் உடல் உபாதை ஏற்ப்பட்டால்,அதை உடனே மருந்தோ மாத்திரையோ கொண்டு தடை
செய்ய வேண்டாம்.உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான்,நாம் நோய்
என்னும் பிடியிலிருந்து விடுபட்டு
ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.
நாம் வெளியுறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கிறமோ,அதே அளவு நம்
உள் உறுப்பு உணர்வுகளுக்கும்
மொழிகளுக்கும் முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்.அப்போதுதான்
நாம் ஆரோக்கியமாகவும்
அழகான தோற்றத்துடனும்
இருக்கமுடியும்!!
என்றும் அன்புடன்
உங்களில் நான்..
Paragahakotuwa
Wednesday, April 19, 2023
படிப்பதற்கு உக்கந்த நேரம் எது?
படிப்பதற்கு உக்கந்த நேரம் எது?
மாணவர்கள், தங்களின் பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற நேரம் எது ? என்பது குறித்து பலர் பலவிதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம். அதில் பெரும்பாலானோர், அதிகாலை நேரமே படிப்பதற்கு ஏற்ற நேரம் என் கூறியிருப்பார்கள். அப்போது தான், மனம், எந்த சிந்தனையுமின்றி தூய்மையாக இருக்கும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருப்பார்கள்.
ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கூறுவோர் அதிகம் உள்ளனர். இரவோ அதிகாலையோ அல்லது மாலைநேரமோ, யாருக்கு எந்த நேரம் ஒத்து வருகிறதோ, அந்த நேரத்தில் படிப்பதே நல்லது என்பது தான் அவர்களின் கருத்து.
சிலருக்கு அதிகாலையில் இரவில் விழிப்பது பிடிக்கலாம். சிலருக்கு படிப்பது தான் பிடிக்கலாம். சிலருக்கோ மாலையில் தொடங்கி, இரவு 9 மணிக்குள் படித்து விடுவது பிடிக்கலாம். எனவே அவரவர் மனநிலை தான் இந்த விடயத்தில் முக்கியம்.
வாழ்வில் வெற்றியடைந்த பலரை, அவர்கள் எந்த நேரத்தில் படிப்பீர்கள் என்று கேட்கும் போது, அவர்களில் பெரும்பாலானோர் சொல்வது, இரவு நேரத்தைத்தான் என்பதை நாம் கவனிக்கலாம்.
இரவு நேரத்தை பொறுத்தவரை. ஒரு பெரிய நன்மை என்னவெனில், அதிக அமைதி நிலவும் நேரமாக இரவு ஆனால், அதிகாலை நேரம் என்பது நேரம் இருக்கிறது. அப்படியல்ல. பால்காரர் சத்தம் தொடங்கி, வீட்டு வாசல்களை பெருக்கி, வாசல் தெளிக்கும் சத்தம் தொடங்கி, வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் சத்தம் தொடங்கி, பலவிதமான சத்தங்கள் அதிகாலையில் தொடங்கிவிடும். ஏனெனில், நம்மோடு சேர்ந்து, பலரும் அதிகாலையில் எழுவார்கள்.
ஆனால், இரவைப் பொறுத்தவரை, நாய்கள் குரைக்கும் சத்தம் வேண்டுமானால் எப்போதேனும் தொல்லை தரலாம். ஏதேனும் வாகனம் வரும் சத்தம் கேட்கலாம் மற்றபடி நள்ளிரவு நெருங்க நெருங்க, அமைதி கூடிக்கொண்டே செல்லும். அதுதான் இரவு நேரப்படிப்பின் பலமே.
சிலரை பொறுத்தமட்டில், வெளியிலிருந்து வரும் இரைச்சல் குறித்து அதிகம் தொந்தரவையோ அல்லது இடைஞ்சலையோ உணர மாட்டார்கள். அவர்களது இல்லத்தில், இன்னொரு அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தமோ கேட்கலாம். ஆனால், இவையெல்லாம் அவர்களுக்கு பெரிய தொந்தரவாகவே இருக்காது படிக்கும் நேரம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். இரவு 9 மணி, மிஞ்சிப் போனால் 10 மணிக்குள் அவர்கள் படிப்பை முடித்துவிடுவார்கள்.
இன்னும் சிலருக்கு, காலை உணவை அருந்திய பின்னர், படிக்கத்தொடங்கி மதிய உணவிற்குள்ளான நேரத்திற்குள் படிக்க பிடிக்கும். ஏனெனில் மதியத்திற்கு மேல், தூக்கம் வரும் என்பதால் மேற்கண்ட நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு பாலர் ஒருவர், தனது படிக்கும் நேரம் குறித்து சொன்ன போது, "நான் தேர்வு நேரங்களில் மாலையில் வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிட்டுவிட்டு, மாலை 5 மணியளவில் தூங்கிவிடுவேன். இரவு 10 மணிளயவில் எழுந்து, அதிகாலை வரை தொடர்ந்து படிப்பேன். நான் பள்ளி தேர்வுகளில் முதல் மாணவனாக வந்தேன்" என்றார். அவரின் படிக்கும் நேர பழக்கம் பல மாணவர்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம்.
எனவே மேற்கண்ட தகவல்களிலிருந்து மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை என்னவெனில் தங்களின் உடலுக்கும், மனதுக்கும், கவனமாய் படிப்பதற்கும் எந்தநேரம் உகந்ததாய் அமைகிறதோ, அந்த நேரத்தையே தேர்வு செய்து படிக்கவும்.
பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக, நேரத்தையோ, இரவு அதிகாலை நேரத்தையோ அல்லது வேறு பொழுதுகளையோ நீங்கள் தேர்வு செய்ய முயலவேண்டாம். ஏனெனில் அவரவர்க்கு ஒத்துவரும் நேரத்தையே. பெரும்பாலானோர் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே, படிக்கும் நேரத்தை தேர்ந்தெடுப்பதென்பது முற்றிலும் உங்களின் சௌகரியம் மற்றும் விருப்பம், ஏனெனில் நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பது தான் முக்கியமே தவிர, எந்த நேரத்தில் படிக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்.
MSM Imthihas
Paragahakotuwa
Sunday, April 16, 2023
2023 விஞ்ஞானப் பாடத்தில் எதிர் பார்க்கப்படும் வினாக்கள் எவை?
க. பொ. த. ( சா / த) 2022 (2023) விஞ்ஞானம் 34 T (11) - பகுதி 2 இல் எதிர்பார்க்கப்படுகின்ற பாடப்பரப்புக்கள்.....
🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒
அமைப்புக் கட்டுரை வினாக்கள்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
01. உயிர்கோளம் ( சூழல் மாசடைதல்)
02. ஒளித்தொகுப்பு, சுவாசம் மற்றும் வளர்ச்சி உயிர்ச்செயன்முறை
🔴 அங்கிப்பாகுபாடு
🔴 கலம், கலப்பிரிவு மற்றும் இழையம்
🔴 தாவர இனப்பெருக்கம்
03. ஆவர்தன அட்டவனை / அயனாக்கற்சக்தி, மின்னெதிரியல்பு வரைபு
🔴 சாரணுத்திணிவு, மூல், மூலர்திணிவு, வாயு தயாரிப்பு
🔴 இரசாய தாக்க வகைகள்
04. வேக - நேர வரைபு
🔴 நியூட்டனின் இயக்க விதிகள் பரிசோதனை
🔴 உராய்வு
🔴 ஓமின் விதி
🔴 ஆக்கிமிடிசின் தத்துவம்
கட்டுரை வினாக்கள்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥05. இதயம், மூளை, தாவர, விலங்கு இனப்பெருக்கம்
06. 🔴 இருப்பு பிரித்தெடுப்பு, துருப்பிடித்தலின் ஏனைய மூலகங்களின் செல்வாக்கு
🔴 உப்புப் பிரித்தெடுப்பு
🔴 தாக்க வீதம்
07. 🔴 Q = mc®, மின்சாதனங்களில் வலு, சக்தி (E =pt)
🔴 நிலைமாற்றி
🔴 கேத்திர கணித ஒளியியல் / ஒலி
08. A. 🔴 தலைமுறையுரிமை,
🔴 இழையங்கள்
🔴 கலப்பிரிவு
B. 🔴 சக்திக்காப்பு, விசைத்திருப்பம்
🔴 இலத்திரனியல் ( திரான்சிஸ்டரின் ஆளியாகத் தொழிற்படல்)
09. A. 🔴 ஐதரோகாபன் ( ஒருபகுதியம், மீண்டு வரும் அலகு மற்றும் பல்பகுதியம்)
🔴 செறிவு ( நியமக் கரைசல்)
🔴 கொதிநீராவி காய்ச்சி வடித்தல்
தாக்கவீதம்
B. 🔴 வெப்பக்கடத்தல்
🔴 அலைகள் / ஒலி
🔴 உராய்வு
🔴 விளையுள் விசை..
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
By : MNM. Nafras
Science Teacher.
16.04.2023
0712713370
க. பொ. த (சா/ த) பரீட்சைக்குத் தோற்றும் உங்களது பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அனைவரும் பயன்பெறுங்கள்
Tamil Motivation Quite || தமிழ் தன்னம்பிக்கை வரிகள்!..
🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒
Tamil Motivation Quite || தமிழ் தன்னம்பிக்கை வரிகள்!..
🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒
🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤
✍️வெற்றி அடையும் வரை முயற்சி செய்.
வெற்றி அடைந்த பின்,
முயற்சி செய்பவனுக்கு உதவி செய்
🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤🥤
🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹
நீ
நிராகரிப்புகளை கண்டு வீழ்ந்து விடாதே.
ஒருவன் உன்னை தூக்கி
எறிகிறான் என்றால்.
இறைவன் உன்னை தாங்கி
பிடிப்பான் என்று அர்த்தம்.
🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
நம்மை விட்டு எல்லோரும் விலக விலக
நாம் உயர வேண்டும்.
விட்டு விலகியவர்கள் நம்மை
தொட முடியாத உயரத்தில் நிலவு போல்.
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடை.
முடிவில்லா பிரச்சனை இங்கு இல்லை.
விடையில்லா கேள்வியும் இங்கு இல்லை.
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
தூண்டிலில் சிக்கிய மீன் எவ்வளவு
போராடினாலும் அது மனிதனின்
உணவிற்கு இரையாகிறது.
நாம் மீனாக இருக்க வேண்டுமா! அல்லது,
மீன் பிடிப்பவனாக இருக்க வேண்டுமா!
என்பது நம் கையில் தான் உள்ளது.
🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡
கத்தி🔪என்று தெரிந்தும்
கால்தடம் பதித்தவர்கள் தான்
இன்று காலத்தை கைபிடியில்
கசக்கி வைத்திருக்கிறார்கள்.
🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡
🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣
அவசரப்படாதே நேரம் வரும் போது
தானே நடக்கும்.
முயற்சித்துக் கொண்டே இரு.
முயற்சி இல்லை என்றால்,
இதுவும், அதுவும், எதுவும் இல்லை.
🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
நம்பிக்கை என்பது
உன் கையில் இருக்கும் வரை,
வெற்றி என்பது
உன் கை தொடும் தூரம் தான்..
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
வாழ்க்கையில் எத்தனை முறை
உதைத்தாலும் மீண்டு வர முடியும்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
உன் தாரக மந்திரமாக இருந்தால்👍...!..
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு
பெரியது என்பது முக்கியம் அல்ல.
உன் தன்னம்பிக்கையும், துணிச்சலும்
அதைவிட பெரிது என்பது தான் முக்கியம்
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
வெற்றி என்பது கதவு போல்,
தட்டி பார். திறக்கவில்லை எனில்,
முட்டி பார். முட்டியும்
திறக்கவில்லை
எனில் தகர்த்து எரிந்து விடு
💪தடைகளை💪...!
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
PARAGAHAKOTUWA
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
தாய்மை ஒரு அற்புதம்தான்..
தாய்மை ஒரு அற்புதம்தான்..
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
இடதுபுறம் ஏழு மணி நேரம் நீடித்த
பிரசவ அறுவை சிகிச்சைக்குப்பின்
தாயின் கைகளில் புதிதாகப் பிறந்த
குழந்தை || வலதுபுறம் மருத்துவர் அழுகிறார்.
தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் குழந்தை சாதாரணமாக பிறக்கவில்லை. தாயின் 11 வருட பொறுமை பிரார்த்தனை, 7 மணிநேர அறுவை சிகிச்சையின் முடிவில் 'குழந்தை அல்லது தாய் என்ற ஒற்றைத் தெரிவு' தெளிவாக இருந்தது.
மருத்துவர்கள் போராடி எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் குழந்தையையும் தாயையும் ஒன்றாகக் காப்பாற்ற முடியவில்லை.
கடைசியில் தாயானவள்,"தன் உயிரை பணயம் வைத்து அவளின் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டதை டாக்டர் முடிவு செய்தார். குழந்தை பிறக்கின்றது. குழந்தையை தாயிடம் கொடுத்தனர் கடைசியாக இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் பெற்ற குழந்தையை நெஞ்சோடு அணைத்து, முத்தமிட்டு புன்னகைக்க.... அவளின் கண்கள் நிரந்தரமாக மூடுறது.
பிறக்கும் எல்லாக் குழந்தையும்போல அதுவும் ஏதும் அறியாமல் அழுகிறது...
இருவருக்கும் இடையில் எவ்வளவு குறுகிய நிமிடச் சந்திப்பு. தாய் இல்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய நீண்ட வேதனை..!
தாய்மை ஒரு அற்புதம்தான்..
(மருத்துவரின் வாட்ஸ்அப் பகிர்வு)
Saturday, April 15, 2023
பரகஹகொடுவ பள்ளியின் சரித்திரம் அறிந்து கொள்ளுங்கள்!.. || History of Parahagahakotuwa Masjid !..
பரகஹகொடுவ பள்ளியின் சரித்திரம் அறிந்து கொள்ளுங்கள்!.. || History of Parahagahakotuwa Masjid !..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Friday, April 14, 2023
How many types of teachers are there? In Tamil || எத்தனை வகையான ஆசிரியர்கள் உள்ளனர்? தமிழில்
எத்தனை வகையான ஆசிரியர்கள் உள்ளனர்? || How many types of teachers are there?
👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
ஆசிரியர்கள் மூன்று வகையினர்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
1. முறைப்பாடு செய்பவர்கள் (complain)
2. தௌிவுபடுத்துபவர் (Explain)
3. ஊக்குவிப்பவர் (Inspire)
👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓👨🎓
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
1. முறைப்பாடு செய்பவர்கள் (complain)
இவர்கள் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களாவர். அவர்கள் அனைத்தையூம் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர். அனைவரையும் குறை சொல்வர். மாணவர்கள் பலவீனமானவர்கள்இ அதிபர் அடாத்தானவர். பாடத்திட்டம் பொருத்தமில்லை. அனைத்திலும் குறைபாடுள்ளது. இந்த ஆசிரியர்கள் முழு முறைமையையூம் பாதிப்படையச் செய்கின்றனர். அவர்கள் தமக்கு மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டுவருகின்றனர்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2. விளக்கமளிப்பவர்கள் (Explain)
இவர்கள் சிறந்த தொடர்பாளர்கள். அவர்கள் அறிந்த அனைத்து விடயங்களையூம் மிகவூம் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர். தலையிலிருந்து தலைக்கு தகவல்களைக் கடத்துவதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர். கற்பித்தலில் எவ்வளவூதான் வெற்றி பெற்றாலும் எதிர் மனப்பாங்கு கொண்டவர்கள் ஆபத்தானவர்களே.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3. ஊக்குவிப்பவர் (Inspire)
இவர்கள் உணர்வூபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகன்றனர். மாணவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிக் கொடுக்கும் தந்தை போன்றவர்கள். தாய் போன்றவர்கள். சில சந்தர்ப்பங்களில் தந்தையாக தாயாக சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்பார்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
REFERANCE :- படித்ததில் பிடித்தது
FB:- EDU FREE ACADEMY
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
Paragahakotuwa
Thursday, April 13, 2023
தமிழ் & சிங்கள புது வருட கொண்டாட்டம் 2023 // Sinhala & Tamil New Year 2023
🔥 தமிழ் & சிங்கள புது வருட கொண்டாட்டம் 2023 🔥// 🔥 Sinhala & Tamil New Year 2023 🔥
Tuesday, April 11, 2023
உணர்வுகளை மதிக்காத இடத்தில் Motivation
உணர்வுகளை மதிக்கத் தெரியாத இடத்தில் கோபுரமாய் இருப்பதை விட.... உணர்வுகளை மதிக்கத் தெரிந்த இடத்தில் குப்பையாய் இருப்பதே மேல்....
வாழ்க்கையில் எதுவுமே நமக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்து கொண்டால் சந்தோஷங்கள் மட்டுமல்ல துக்கங்களும் கொண்டாட்டத்திற்குரியதே...
வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்.
1) பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது
2) மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.
உங்கள் கவலை, துன்பம், ரகசியம் அனைத்தையும் கடவுளிடம் மட்டும் பகிருங்கள். உறவுகளிடம் பகிர்ந்தால், உங்கள் கவலை, துன்பம், ஏமாற்றம் இரட்டிப்பு ஆகக்கூடும்
பாம்பு எத்தனை முறை தோலை உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான். பச்சோந்தி எத்தனை முறை நிறம் மாறினாலும் அது எப்போதுமே பச்சோந்தி தான் துரோகம் துரோகம் தான் ஏமாற்றம் ஏமாற்றம் தான்
போராடி கிடைத்தது கருவறை..! தேடலால் கிடைத்தது வகுப்பறை..! தேடிக் கிடைத்தது மணவறை..! தேடாமல் கிடைக்கும் கல்லறை..!
இருக்கும் போது கிடைக்காத நீதியும் இறந்த பின் கொடுக்கும் திதியும். இறந்த பின் கிடைக்கும் நிதியும். இறந்தவருக்கு யாதொரு பயனும் இல்லை.
கொடிய மிருகங்கள் நம்முள்ளேதான் இருக்கின்றது அதை கட்டுபடுத்த தெரிந்தவர் ஞானி அதை கட்டவிழ்த்து விடுபவன் மகா பாவி...!
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கியுள்ளது. நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது
நாம் செய்த தவறுக்கு கிடைக்காத தண்டனை. செய்யாத தவறுக்கு கிடைக்கும் போது தான். வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கிறது விதி வலியது...!
கஷ்டங்களை தாங்கும் இதயம் காயங்களை தாங்குவது இல்லை. வலிகளை தாங்கும் இதயம் கடுமையான வார்த்தைகளை தாங்குவது இல்லை ஏமாற்றத்தை தாங்கும் இதயம் துரோகத்தை தாங்குவது இல்லை
முட்டாள் பழி வாங்க துடிப்பான். புத்திசாலி மன்னித்து விடுவான். அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்தே விழகி விடுவான்.
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால். எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
ஒருவரின் தேவை அறிந்து அவர் கேட்காமலே நீ உதவி செய்வாய் என்றால் நீயும் கடவுள் தான்.
சூழ்நிலையால் மாறுகிறவர் கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்... சுயநலத்தால் மாறுகிறவர் கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்...!
கஷ்டப்பட்டு வாழனும் என்று வாழாமல். நாலு பேருக்கு நல்லது பண்ணி இஷ்டப்பட்டு வாழுங்கள். கவலையின் முடுச்சுகள் ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுப்பது இல்லை...!
MSM இம்திஹாஸ்
பரகஹகொடுவ,
வாழ்க்கை தத்துவம்
தேடும் அனைத்தும் கிடைப்பதில்லை கிடைத்த அனைத்தும் தேடிக் கிடைத்ததில்லை......
எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து....
வெளியே சிரித்து உள்ளே தவித்து வாழும் வாழ்க்கை தான் இறைவன் நமக்குக் கொடுத்தது...
தண்ணீரில் கல் எறிவதால் தண்ணீருக்கு வலிப்பதில்லை
கல் தான் காணாமல் போகிறது....
விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் நாம் தண்ணீராக இருந்தால்
வெற்றி நிச்சயம்.
🌹🌹